iPhone 15 Price cut: ஐபோன் 16 வருகையை முன்னிட்டு தள்ளுபடி; ஃபிளிப்கார்ட்டில் அற்புத சலுகைகள்!!

Published : Aug 23, 2024, 12:20 PM IST

ஆப்பிள் ஐபோன் 16 (iPhone 16) சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அந்நிறுவனம் iPhone 15 விலையை குறைத்துள்ளது.  ஃபிளிப்கார்ட் (Flipkart) பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.

PREV
16
iPhone 15 Price cut: ஐபோன் 16 வருகையை முன்னிட்டு தள்ளுபடி;  ஃபிளிப்கார்ட்டில் அற்புத சலுகைகள்!!
iPhone 15 Price cut in Flipkart

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட உள்ளது. இதனால் தற்போது சந்தையில் உள்ள ஐபோன் 15 சீரிஸ் விற்பனையில் சுணக்கம் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐபோன் 15 சீரிஸ் மொபைல் விற்பனையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

26
Discount on iPhone 15

ஐபோன் 16 மாடலுக்கான அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படலாம். இந்த நிலையில், ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 15 மொபைலுக்கு ஆகஸ்ட் 26 வரை கணிசமான தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. 

36
iPhone 15 available at rs.64 999

ஐபோன் 15 - 128ஜிபி வேரியண்ட் ஃபிளிப்கார்ட்டில் ரூ.64,999-க்கு கிடைக்கிறது. இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.79,600-க்கு கிடைக்கிறது. அதாவது ஃபிளிப்கார்ட்டில் ரூ.14,601 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. மற்ற வேரியண்ட், சீரிஸ்களிலும் பெரிய தள்ளுபடிகள் உள்ளன.

46
Exchange Offer

தள்ளுபடியுடன், எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. உங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டு மேலும் தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்ளலாம். மொபைல் செயல்பாடு பொறுத்து  எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.42,100 வரை தள்ளுபடி பெறலாம். 

56
iPhone Special offer

ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் இதுவே மிகப்பெரிய தள்ளுபடி என்று சொல்ல வேண்டும். ஆனால்,  ஃபிளிப்கார்ட் எந்த வங்கி சலுகைகளையும் வழங்கவில்லை. எனவே ஐபோன் 15 வாங்க விரும்புபவர்கள் உடனே ஆர்டர் செய்யலாம். இந்த தள்ளுபடி முடியும் முன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

66
iPhone 16 Series

ஐபோன் 16 சீரிஸைப் பொறுத்தவரை, சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பெரிய பேட்டரி, புதிய சிப்செட், சிறிது மேம்பட்ட வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாடல்களின் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது, எனவே பட்ஜெட் பிரச்சனை இல்லாதவர்கள் ஐபோன் 16-க்காக காத்திருக்கலாம். பட்ஜெட் குறைவாக இருந்தால் தற்போது ஃபிளிப்கார்ட் வழங்கும் சலுகையுடன் ஐபோன் 15 சீரிஸ் மாடலை வாங்குவது சிறந்தது.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories