டிராய் புதிய விதிகள்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பல்வேறு விலைகளில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா ஆகியவற்றை கொண்ட தொகுப்பு ரீசார்ஜ் திட்டங்களை தான் செயல்படுத்தி வருகின்றன. கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் ஏதும் இல்லை.
இதனால் டேட்டா பயன்பாடு தேவையில்லாத வாடிக்கையாளர்களும் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா வசதி கொண்ட தொகுப்பு திட்டங்களை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இந்த தொகுப்பு திட்டங்களுக்கு கட்டணம் அதிகமாக உள்ளது.