ஐபோன்களுக்கு அதிரடி விலை குறைப்பு; இதைவிட பெஸ்ட் ஆஃபர் கிடைக்காது; லேட் பண்ணாதீங்க!

Published : Jan 07, 2025, 11:54 AM IST

ப்ளிப்கார்ட்டில் ஐபோன்களுக்கு அதிரடி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. எவ்வளவு விலை குறைப்பு? என்னென்ன சிறப்பம்சங்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
ஐபோன்களுக்கு அதிரடி விலை குறைப்பு; இதைவிட பெஸ்ட் ஆஃபர் கிடைக்காது; லேட் பண்ணாதீங்க!
Apple iPhones

ஐபோன்கள் மீது ஆசை 

புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க ஆசைப்படுகின்றனர். இதில் பலரது நீண்ட நாள் ஆசை ஐபோன்கள் வாங்க வேண்டும் என்பதே. இந்தியாவில் ஐபோன் வைத்திருப்பது பெரும் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால் 'நாமும் ஒருநாள் ஐபோன் வாங்க வேண்டும்' என்ற கனவில் நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ப்ளிப்கார்ட் ஐபோன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கி வருகிறது. அதாவது ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 16 மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் அதிரடி ஆபர் வழங்கி வருகிறது.

24
Flipkart Discounts On IPhones

ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (Apple iPhone 15 Plus) 

ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் மாடலுக்கு ப்ளிப்கார்ட்டில் 18% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.79,900 என்ற விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.64,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் ஆக்சிஸ் பேங்க் வங்கி கார்டு பயன்படுத்தி இந்த போன் வாங்கினால் 5% கேஷ் பேக் சலுகை கிடைக்கும். இது தவிர அனைத்து வங்கி கார்டுகளையும் பயன்படுத்தினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருந்தால் எக்சேஞ்ச் ஆபர் மூலம் இந்த போனை ரூ.38,150க்கு வாங்க முடியும்.

இந்த போனின் அம்சங்களை பொறுத்தவரை இதில் 6.7 இன்ச் Super Retina XDR டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 48 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி கேமரா + 12 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. A16 Bionic Chipபொருத்தப்பட்டுள்ளது. 

அடேங்கப்பா! ஒன்பிளஸ் போனுக்கு இவ்வளவு விலை குறைப்பா? பட்டையை கிளப்பும் ஆஃபர்!

34
iPhone 15 Model Discount

ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15)

ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலை ரூ.69,900 ஆகும். இந்த போனுக்கு ப்ளிப்கார்ட்டில் 12% தள்ளுபடி வழங்கப்படுவதால் ரூ.60,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் ஆக்சிஸ் பேங்க் வங்கி கார்டு பயன்படுத்தி இந்த போன் வாங்கினால் 5% கேஷ் பேக் சலுகையும், அனைத்து வங்கி கார்டுகளையும் பயன்படுத்தினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இது மட்டுமின்றி எக்சேஞ்ச் ஆபர் மூலம் இந்த போனை ரூ.38,150க்கு வாங்கலாம்.

இந்த போனில் 6.1 இன்ச் Super Retina XDR டிஸ்பிளே பொருத்தபட்டுள்ளது. A16 Bionic Chip மற்றும்  6 Core Processor Processor அம்சங்கள் உள்ளன. கேமராவை பொறுத்தவரை ஐபோன் 15 பிளஸ் மாடலை போன்று 48 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி கேமரா + 12 எம்பி செல்பி கேமரா உள்ளது.

44
iPhone 16 Model Discount

ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16)

ஆப்பிள் ஐபோன் 16 மாடலுக்கு ப்ளிப்கார்ட்டில் 6% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதாவது ரூ.79,900 என்ற விலை கொண்ட இந்த போனை இப்போது ரூ.74,900க்கு வாங்கலாம். ஆக்சிஸ் பேங்க் வங்கி கார்டு பயன்படுத்தி இந்த போன் வாங்கினால் 5% கேஷ் பேக் சலுகையும்,  UPI Transactions மூலம் இந்த போன் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கூடுதலாக கிடைக்கும். எக்சேஞ்ச் ஆபர் மூலம் இந்த போனை ரூ.31,150க்கு வாங்கிக் கொள்ள முடியும்.

ஐபோன் 16 அம்சங்களை பொறுத்தவரை 6.1 இன்ச் OLED Display, 48MP + 12MP மெயின் கேமரா, 12எம்பி செல்பி கேமரா ஆகியவை உள்ளன. இந்த போனுக்கு 1 ஆண்டு வாரண்டியும் உள்ளது. 

பிஎஸ்என்எல் தரமான சம்பவம்; 14 மாதம் வேலிடிட்டி; கட்டணமில்லை; ஜியோவை தூக்கி சாப்பிடும் ஆஃபர்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories