BSNL Best Plan
பிஎஸ்என்எல் திட்டங்கள்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஒருபக்கம் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கினாலும் மறுபக்கம் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. அதே வேளையில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் குறைந்த விலையில் சூப்பரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
BSNL Recharge Plan
14 மாதம் வேலிடிட்டி நீட்டிப்பு
தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவை சென்று விட்ட நிலையில், பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவை ஆரம்பிக்காத நிலையில், பிஎஸ்என்எல் பக்கம் வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருவதற்கு குறைந்த விலையில் திட்டங்கள் வழங்கி வருவதே காரணாமாகும். இந்நிலையில் பிஎஸ்என்எல் கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் இன்றி ஒரு பிளானில் 14 மாதம் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. எது என்ன திட்டம்? என்பது குறித்து பார்ப்போம்.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.2,399 என்ற விலையில் செயல்படுத்தி வரும் ரீசார்ஜ் திட்டத்தில் எந்த ஒரு கட்டணமும் இன்றி ஒரு மாதம் வேலிட்டியை நீட்டித்துள்ளது. ரூ.2,399 என்ற விலை கொண்ட இந்த திட்டத்தில் சுமார் 13 மாதங்கள் அதாவது 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 மாதங்கள் ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த ரூ.2,399 திட்டத்தில் 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; இந்தியாவில் AI புரட்சிக்கு வித்தா?
BSNL One Year Plan
என்னென்ன நன்மைகள்?
ரூ.2,399 திட்டத்தை பொறுத்தவரை அன்லிமிடெட் கால்ஸ் கிடைக்கும். இதில் உள்ளூர் கால்ஸ்சும், ரோமிங் கால்ஸ்சும் உண்டு. மேலும் 425 நாட்களுக்கும் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மொத்தமாக 850 ஜிபி டேட்டா வரை பெற முடியும். டேட்டா விரைவில் தீர்ந்து போனாலும் 40kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து அனுபவிக்க முடியும். இது தவிர தினமும் 100 இலவச எம்எம்எஸ்களும் உங்களுக்கு கிடைக்கும்.
Jio One Year Plan
ஜியோவில் எப்படி?
இதே ஓராண்டு திட்டத்தில் ஜியோவை ஒப்பிட்டு பார்த்தால் ஜியோ ரூ.3,599 கட்டணத்தில் 365 நாட்கள் தான் வேலிடிட்டி வழங்குகிறது. தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. பிஎஸ்என்எல் திட்டத்துடன் ஒப்பிட்டால் இதில் கட்டணமும் அதிகம்; வேலிடிட்டியும் குறைவு. ஆகவே ஓராண்டு திட்டத்தை விரும்புபவர்களுக்கு பிஎஸ்என்எல் நல்ல சாய்ஸ்ஸாக இருக்கும். பிஎஸ்என்எல்லின் இந்த ஆஃபர் ஜனவரி 16ம் தேதி வரை மட்டுமே இருக்கும். ஆகவே லேட் பண்ணாமல் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யுங்கள்.
ரூ.9,999 விலையில் அட்டகாசமான 5ஜி செல்போனை அறிமுகப்படுத்தியது ரெட்மி நிறுவனம்