புத்தாண்டு தொடங்கி விட்டதாலும், பொங்கல் பண்டிகை காலம் என்பதாலும் பலரும் புதிய போன்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஏராளமான நிறுவனங்கள் போட்டி போட்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நிலையில், மறுபக்கம் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகையை வாரி வழங்கி வருகின்றன.
24
Flipkart Offer
26% தள்ளுபடி
அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) போனுக்கு ப்ளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது இந்த போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.19,999 ஆகும். இப்போது ப்ளிப்கார்ட்டில் இந்த போனுக்கு 26% தள்ளுபடி அளிக்கப்படுவதால் ரூ.14.710 என்ற விலையில் வாங்கிக் கொள்ள முடியும். மேலும் ஆக்சிங் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதலாக 5% கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி சிறப்பு அம்சங்களை பார்த்தால் ஏராளமான வசதிகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.72 இன்ச் எல்சிடி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் பி3 கலர் காமட் மற்றும் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. 240HZ டச் சாம்ப்ளிங் ரேட் இருக்கிறது.
மேலும் சக்திவாய்ந்த ஆக்டா கோர் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.
44
Discount for Smartphones
கேமரா வசதி என்ன?
கேமராவை பொறுத்தவரை மல்டி ஆட்டோபோகஸ் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ + செல்பி கேமரா வசதியும் உள்ளது. இந்த போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இது மட்டுமின்றி 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட்டும், 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்ட் சிலாட் சப்போர்ட்டும் இருக்கிறது.
67W பாஸ்ட் சார்ஜிங் வழங்கும் 5000mAh பேட்டரி உள்ளதால் அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த போன் லிம் மற்றும் கிரே கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. படெஜ்ட் விலையில், அதிக அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாக இருக்கும்.