ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23 முதல் தொடங்குகிறது. Apple iPhone 16, Samsung Galaxy S24, மற்றும் பல பொருட்கள் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கும்.
பண்டிகை சீசன் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஃப்ளிப்கார்ட் தனது பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2025–க்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் விற்பனை செப்டம்பர் 23ஆம் தேதி முதல் துவங்குகிறது. ஆனால் எந்த தேதி வரை நீடிக்கும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதே நாளில், அமேசானும் தனது Great Indian Festival Sale–ஐ துவக்கவுள்ளது.
24
ஃப்ளிப்கார்ட் சலுகைகள்
இந்த விற்பனையில், பிளஸ் மற்றும் பிளாக் மெம்பர்ஸ் அனைவருக்கும் early access கிடைக்கும். மேலும், ஸ்டீல் டீல்கள், வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள், பண்டிகை ரஷ் ஹவர்ஸ் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கென ஒரு தனி மைக்ரோசைட்யும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
34
ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸ் சேல் காலத்தில், பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். குறிப்பாக Apple iPhone 16, Samsung Galaxy S24, Motorola Edge 60 Pro போன்ற மாடல்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இதில் மொபைல்மட்டுமன்றி OnePlus Buds 3 போன்ற ஆடியோ பொருட்கள், 55 இன்ச் ஸ்மார்ட் டிவி, ஃப்ரண்ட்-லோட் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விலைகுறைப்பில் கிடைக்கும்.
இதனால் புதிய சாதனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். மேலும், Axis Bank மற்றும் ICICI Bank உடன் கூட்டு சேர்ந்துள்ளது. அந்த வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10% வரை தள்ளுபடி பெற முடியும்.