Cyber Crime Alert: 2 நிமிட வீடியோ லிங்க்.. தொட்டால் மொத்த பேங்க் அக்கவுண்ட்டும் காலி.. தப்பிப்பது எப்படி?

Published : Jun 07, 2026, 01:05 PM IST

Cyber Crime Alert:: மொபைலில் வரும் 2 நிமிட வீடியோ லிங்கை தொட்டால் உங்கள் பேங்க் அக்கவுண்ட் முழுமையாக காலி ஆகிவிடும். இந்த மோசடி என்ன? இதில் இருந்து எப்படி தப்பிப்பது? என விரிவாக பார்க்கலாம்.

PREV
14
அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடிகள்

இந்தியாவில் காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டு வரும் நிலையில் சிலர் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். நமது நாட்டில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அண்மைகாலமாக '2 நிமிட வீடியோ' லிங்குகள் அதிகம் ஃபார்வர்டு செய்யப்படுகின்றன. வீடியோ என்ற பெயரில், யூசர்களின் மொபைலில் மால்வேர், போலி செயலிகள் அல்லது ஆபத்தான ஃபைல்களை டவுன்லோட் செய்ய வைக்கிறார்கள். பல வழக்குகளில், மக்களின் வங்கி கணக்குகள் காலியாகி உள்ளன. உங்கள் மொபைலுக்கும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான வீடியோ வந்தால், அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

24
2 நிமிட வீடியோ ஸ்கேம் என்ன?

இந்த மோசடியில், சைபர் திருடர்கள் உங்களுக்கு வாட்ஸ்அப், டெலிகிராம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது SMS மூலம் ஒரு வீடியோ லிங்கை அனுப்புவார்கள். 'உங்கள் வீடியோ வைரலாகிவிட்டது, இந்த வீடியோவில் நீங்கள் இருக்கிறீர்கள்' என்பது போன்ற செய்திகளுடன் அந்த லிங்க் வரும். இந்த லிங்கை கிளிக் செய்தவுடன், சில செயலிகளை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய வைப்பார்கள். இங்கிருந்துதான் சைபர் திருடர்களின் ஆட்டம் தொடங்குகிறது.

சைபர் மோசடிகளின் டார்கெட் யார்?

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள், ஆன்லைன் பேங்கிங் செய்பவர்கள், யுபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மூத்த குடிமக்கள், மற்றும் புதிதாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களையே இந்த மோசடி கும்பல் குறிவைக்கிறது.

34
வங்கி அக்கவுண்ட் எப்படி காலியாகும்?

1.போலி செயலிகளை இன்ஸ்டால் செய்வது: வீடியோவைப் பார்க்க வேண்டும் என்று கூறி, ஒரு APK ஃபைலை டவுன்லோட் செய்ய வைப்பார்கள். அந்த ஆப் இன்ஸ்டால் ஆனவுடன், அது உங்கள் மொபைலின் கட்டுப்பாட்டை எடுக்க முயற்சிக்கும்.

2. OTP மற்றும் SMS-ஐ திருடுவது: சில மால்வேர்கள் உங்கள் போனில் உள்ள SMS-களைப் படிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம், வங்கி OTP மற்றும் சரிபார்ப்பு குறியீடுகளைத் திருடிவிடுவார்கள்.

3. UPI தகவல்களைத் திருடுவது: ஒரு போலிப் பக்கத்தில் உங்கள் UPI பின், வங்கி விவரங்கள் அல்லது கார்டு தகவல்களை நிரப்பும்படி செய்வார்கள். 

4. ஸ்கிரீன் ஷேர் செய்ய வைப்பது: பல நேரங்களில், 'வீடியோ ஓப்பன் ஆகவில்லை' என்று பொய் சொல்லி, AnyDesk, TeamViewer அல்லது பிற ரிமோட் அக்சஸ் செயலிகளை டவுன்லோட் செய்யச் சொல்வார்கள். இதன் பிறகு, திருடர்கள் உங்கள் மொபைல் ஸ்கிரீனைப் பார்க்க முடியும்.

44
வீடியோ லிங்க் ஃபேக் என்று கண்டுபிடிப்பது எப்படி?

இந்த லிங்க் தெரியாத நம்பரில் இருந்து வரும். வெப்சைட் பெயர் வித்தியாசமாக இருக்கும். வீடியோ பார்க்க ஆப் டவுன்லோட் செய்யச் சொன்னால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'உடனடியாகப் பாருங்கள்', 'ரகசிய வீடியோ', 'வைரல் கிளிப்' போன்ற வார்த்தைகள் இருந்தால், அந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள்.

ஒரு வேளை தவறி லிங்க் திறந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதலில், மொபைலின் Wi-Fi மற்றும் மொபைல் டேட்டாவை ஆஃப் செய்யுங்கள். இது சந்தேகத்திற்கிடமான ஆப் அல்லது ஃபைலின் டேட்டா பரிமாற்றத்தை நிறுத்த உதவும். உங்கள் வங்கி கணக்கு, யுபிஐ வரலாறு மற்றும் சமீபத்திய பரிவர்த்தனைகளை உடனடியாகச் சரிபார்க்கவும். 

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை தெரிந்தால், உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும். சமீபத்தில் டவுன்லோட் செய்த எந்தவொரு அறிமுகமில்லாத செயலியையும் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்யுங்கள். உங்கள் கூகுள், பேங்கிங், யுபிஐ மற்றும் சமூக ஊடக பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்றவும். முடிந்தவரை 2FA (Two-Factor Authentication) முறையை ஆன் செய்யவும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories