ஒரே இடத்தில் 1,000 மெட்ரிக் டன் தங்கம், ரூ.7 லட்சம் கோடி மதிப்பு... உலக சந்தையை அதிரவைத்த சீனாவின் தங்க மலை!

Published : Sep 19, 2026, 02:17 PM IST

உலகப் பொருளாதாரத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறது சீனா. ஹுனான் மாகாணத்தின் நிலத்தடியில், கற்பனைக்கும் எட்டாத அளவிற்குத் தங்கம் கொட்டிக்கிடக்கும் மெகா தங்க வயலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

PREV
15
ஒரே இடத்தில் 1,000 டன் தங்கம்: மலைக்க வைக்கும் மதிப்பு!

சீனாவின் பிங்ஜியாங் கவுண்டியில் உள்ள 'வாங்கு' (Wangu) என்ற பகுதிக்கு அடியில் நிலவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பூமிக்கடியில் ஆச்சரியமூட்டும் விதமாக 40-க்கும் மேற்பட்ட தங்க நரம்புகள் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, இங்கு 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான தங்கம் புதைந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீன யுவான் மதிப்பு: சுமார் 600 பில்லியன் யுவான்

இந்திய ரூபாய் மதிப்பு: சுமார் ரூ.7 லட்சம் கோடி!

இது உலகின் எத்தனையோ நாடுகளின் ஒட்டுமொத்த ஆண்டு பட்ஜெட்டை விடவும் பல மடங்கு அதிகம் என்பதுதான் இதன் அசுர பிரம்மாண்டம்.

25
தரத்தில் ஒரு உலக அதிசயம்: கண்ணெதிரே மின்னும் பாறைகள்!

இந்தக் கண்டுபிடிப்பில் அளவை விட ஆய்வாளர்களை வாயடைக்க வைத்திருப்பது தங்கத்தின் தரம். வழக்கமாக உலகில் உள்ள எந்தவொரு தங்கச் சுரங்கத்திலும், ஒரு டன் பாறையை வெட்டி எடுத்தால் அதில் அதிகபட்சமாக 10 கிராமுக்கும் குறைவாகவே தங்கம் கிடைக்கும். ஆனால், இந்த 'வாங்கு' பகுதியில் தோண்டி எடுக்கப்படும் ஒரு டன் தாதுவில் நம்பமுடியாத அளவிற்கு 138 கிராம் வரை தங்கம் கொட்டிக்கிடக்கிறது! பாறை மாதிரிகளை உடைத்துப் பார்த்தாலே தங்கம் வெறும் கண்ணுக்கே பளபளப்பாக ஜொலிப்பதாகப் புவியியலாளர்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.

35
தென்னாப்பிரிக்காவை முந்தி உலகின் நம்பர் 1 ஆகுமா சீனா?

தற்போதைய நிலவரப்படி, தென்னாப்பிரிக்காவில் உள்ள 'சவுத் டீப்' (South Deep) சுரங்கம்தான் உலகின் மிகப்பெரிய தங்க இருப்பு கொண்ட இடமாக (சுமார் 900 டன்) அதிகாரப்பூர்வமாக உள்ளது. ஆனால், சீனாவின் இந்த புதிய ‘வாங்கு’ சுரங்கத்தின் இருப்பு 1,000 டன்னைத் தாண்டும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் 1 மிகப்பெரிய தங்கச் சுரங்கம் என்ற மகுடத்தைச் சீனா சூட்டிக்கொள்ளும்.

45
பூமிக்கடியில் இவ்வளவு தங்கம் எப்படி உருவானது?

விஞ்ஞானிகளின் விளக்கம்! ஒரே இடத்தில் இத்தனை டன் தங்கம் எப்படித் திரண்டது என்ற கேள்விக்கு, Nature Geoscience இதழில் விஞ்ஞானிகள் ஒரு சுவாரசியமான அறிவியல் விளக்கத்தை முன்வைத்துள்ளனர்.

நிலநடுக்கங்கள் ஏற்படும்போது பூமிக்கடியில் உள்ள பாறைகளில் தீவிர அழுத்தம் உண்டாகிறது. அந்த அழுத்தத்தால் 'பைசோ எலக்ட்ரிசிட்டி' (Piezoelectricity - அழுத்த மின்விளைவு) என்ற மின்னூட்டம் பாறைகளில் உருவாகிறது. இந்த மின்விளைவு, நிலத்தடியில் ஓடும் திரவங்களில் இருந்து தங்கத் துகள்களை அதிவேகமாகப் பிரித்து, ஒரே இடத்தில் நரம்புகளைப் போலப் படிய வைக்கிறது. இதுவே இந்த மெகா தங்கப் படிமம் உருவானதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

55
உலக சந்தையை அதிரவைத்த சீனாவின் தங்க மலை!

உலக அளவில் தங்க உற்பத்தியில் சீனா ஏற்கனவே முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா கண்டுபிடிப்பால், சர்வதேச அளவில் தங்க விநியோகம், இருப்பு மற்றும் அதன் உலகச் சந்தை விலையைத் தீர்மானிக்கும் சக்தியாக சீனாவின் பிடி மேலும் பன்மடங்கு இறுகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories