ரூ.7,499 முதல் தியேட்டர் போல சரவுண்ட் சவுண்ட்: அதிரடி பாஸ், டால்பி அட்மாஸுடன் டாப் 5 சவுண்ட்பார்ஸ் இதோ!

Published : Sep 19, 2026, 11:49 AM IST

புத்தாண்டு பார்ட்டியை அதிரவைக்க சிறந்த 5 சவுண்ட்பார்கள்: சோனி, ஜே.பி.எல், போட் உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் விலை மற்றும் ஆஃபர் விவரங்கள், உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற சவுண்ட்பாரை எப்படி தேர்ந்தெடுப்பது?

PREV
15
1. சோனி HT-S40R ரியல் 5.1ch ஹோம் தியேட்டர் சிஸ்டம்

ஆடியோ திறன்: 600W பவர் அவுட்புட், 5.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ வசதி.

சிறப்பம்சங்கள்: சவுண்ட்பார், அதிர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் வயர்டு சப்-வூஃபர் மற்றும் அறையை முழுமையாக நிரப்பும் வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்கள். சினிமா மற்றும் மியூசிக் எனப் பல்வேறு சவுண்ட் மோடுகள் உள்ளன.

இணைப்பு வசதி: HDMI, ஆப்டிகல், USB மற்றும் புளூடூத்.

விலை: அமேசானில் வங்கி ஆஃபருடன் சேர்த்து தோராயமாக ரூ.25,499.

25
2. ஜெப்ரானிக்ஸ் ஜூக் பார் 9850 5.2.4 CH ஹோம் தியேட்டர்

ஆடியோ திறன்: 5.2.4 சேனல் அமைப்பு மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு.

அம்சங்கள்: 16.51 செ.மீ அளவு கொண்ட இரட்டை வயர்லெஸ் சப்-வூஃபர்கள் அதிரடி பாஸ் அனுபவத்தைத் தருகின்றன. சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் பார்ட்டி மூடை உருவாக்கும் கவர்ச்சிகரமான RGB LED விளக்குகள் இடம்பெற்றுள்ளன.

இணைப்பு வசதி: AUX, USB, ஆப்டிகல், eARC மற்றும் ப்ளூடூத் v5.3.

விலை: அமேசானில் ரூ.24,499.

35
3. ஜே.பி.எல் பார் 800 ப்ரோ, 7.1 (5.1.2) சேனல்

ஆடியோ திறன்: 7.1 (5.1.2) சேனல் டால்பி அட்மாஸ் மற்றும் 3D சரவுண்ட் சவுண்ட்.

அம்சங்கள்: எந்தவொரு வயர் தொந்தரவும் இல்லாத ட்ரூலி வயர்லெஸ் அமைப்பு. இதில் கழற்றி மாற்றியமைக்கும் வசதி கொண்ட (detachable) இரண்டு பின்புற ஸ்பீக்கர்கள் மற்றும் 10-இன்ச் டவுன்-ஃபயரிங் வயர்லெஸ் சப்-வூஃபர் உள்ளது.

இணைப்பு வசதி: வைஃபை, புளூடூத் மற்றும் HDMI eARC.

விலை: அமேசானில் வங்கி ஆஃபருடன் சேர்த்து தோராயமாக ரூ.66,499.

45
4. போட் Aavante ப்ரைம் 5.1 5000D ஹோம் தியேட்டர்

ஆடியோ திறன்: 500W பவர் அவுட்புட் மற்றும் சினிமாட்டிக் டால்பி ஆடியோ ஆதரவு.

அம்சங்கள்: சவுண்ட்பார், வயர்டு சப்-வூஃபர் மற்றும் இரண்டு வயர்டு ரியர் ஸ்பீக்கர்கள் கொண்ட பட்ஜெட் சாதனம். இசை, திரைப்படம் மற்றும் செய்தி கேட்பதற்கேற்ப பிரத்யேக ஈக்வலைசர் (EQ) மோடுகள் உள்ளன.

இணைப்பு வசதி: AUX, USB, ஆப்டிகல், HDMI eARC மற்றும் ப்ளூடூத் v5.3.

விலை: அமேசானில் வெறும் ரூ.7,499.

55
5. Blaupunkt SBW600 XCEED 9.1.4 ஹோம் தியேட்டர்

ஆடியோ திறன்: 700W பவர் அவுட்புட், 9.1.4 சேனல் அமைப்பு, டால்பி அட்மாஸ், டி.டி.எஸ் ஆதரவு.

அம்சங்கள்: 5-சேனல் சவுண்ட்பார், முன்புற-பின்புற அப்-ஃபயரிங் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் அதிர வைக்கும் பாஸ் வழங்கும் 8-இன்ச் வயர்லெஸ் சப்-வூஃபர் மூலம் 360 டிகிரி சரவுண்ட் ஆடியோவை தருகிறது.

இணைப்பு வசதி: HDMI ARC, கோஆக்சியல் (Coaxial), AUX மற்றும் USB.

விலை: அமேசானில் தோராயமாக ரூ33,499.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories