Cheapest Plan: மாதாந்திர போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டம் குறைந்த செலவில் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு பிஎஸ்என்எல் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை வழங்குகிறது.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், குறைந்த மாதக் கட்டணத்தில் போஸ்ட்பெய்ட் இணைப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 திட்டம் வழங்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் மிகவும் குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் பொதுவாக அதிக விலையில் தொடங்கும் நிலையில், குறைந்த செலவில் அடிப்படை சேவைகளைப் பெற விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் மாற்றுத் தேர்வாக இருக்கலாம்.
25
ரூ. 199 போஸ்ட்பெய்ட் திட்டம்
இந்த ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதந்தோறும் 25ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒரு மாதத்தில் பயன்படுத்தப்படாமல் ஒதுக்கப்பட்ட டேட்டாவை அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லும் டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் அதிகபட்சமாக 75ஜிபி வரை டேட்டாவை சேமித்து பயன்படுத்த முடியும்.
இந்தத் திட்டம் கவனம் பெறுவதற்கான முக்கிய காரணம் அதன் விலையாகும். பல தனியார் நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.400 அல்லது அதற்கு மேல் தொடங்கும் நிலையில், அதைவிட குறைந்த செலவில் போஸ்ட்பெய்ட் வசதியை பிஎஸ்என்எல் வழங்குகிறது. மாதாந்திர செலவைக் கட்டுப்படுத்த விரும்பும் பயனர்கள் மற்றும் அடிப்படை டேட்டா தேவையுள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானதாக இருக்கலாம்.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் 25ஜிபி அதிவேக டேட்டா முழுமையாக பயன்படுத்தப்பட்ட பிறகும் இணைய சேவையைத் தொடரலாம். இருப்பினும், அதன் பிறகு பயன்படுத்தும் டேட்டாவுக்கு 1 MB-க்கு 1 பைசா என்ற அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், இந்த ரூ.199 திட்டம் தனிப்பட்ட பயனர்களுக்கான அடிப்படை போஸ்ட்பெய்ட் திட்டமாக உள்ளது, Family Add-on Connection வசதி இதில் இடம்பெறவில்லை.
55
பிற நிறுவனங்களின் பிளான்
ஒப்பீட்டுக்காக பார்க்கும்போது, ஜியோவின் ரூ.199 திட்டம் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இதில் 18 நாட்கள் செல்லுபடியாகும் காலம், தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ ஏஆர் கிளவுட் போன்ற கூடுதல் சேவைகள் வழங்கப்படுகின்றன. எனவே, இரண்டு திட்டங்களின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒன்று போஸ்ட்பெய்ட், மற்றொன்று ப்ரீபெய்ட் என்பதால், பில்லிங் முறை, பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.