BSNL plans
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் ஒதுங்கி வருகின்றனர்.
பிஎஸ்என்லுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து இருப்பதற்கு அது குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருவதே காரணமாகும். அந்த வகையில் பிஎஸ்என்எல் மிகவும் குறைந்த விலையில் டேட்டா வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை என்னென்ன திட்டங்கள்? என்பது குறித்து பார்ப்போம்.
Best BSNL plans
ரூ.97 பிளான்
ரூ.97 விலை கொண்ட பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இதுமட்டுமின்றி அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ் வசதியும் உண்டு. இந்த திட்டம் 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ரூ.98 பிளான்
ரூ.98 விலை கொண்ட பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ் வசதியும் உண்டு. இந்த திட்டம் 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ஒரே ஒரு ரீசார்ஜ்.. ஒரு வருஷத்துக்கு கவலையில்லை.. பிஎஸ்என்எல்லின் செம பிளான்!
Low Price BSNL plans
ரூ.98 பிளான்
ரூ.98 விலை கொண்ட பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். 2ஜிபி டேட்டா முடிந்தாலும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் கால் வசதி கிடையாது. வேலிடிட்டி 18 நாட்கள்.
ரூ.94 பிளான்
ரூ.94 விலை கொண்ட பிளானில் மொத்தமாக 30 ஜிபி டேட்டா வழங்கப்படும். 200 நிமிடங்கள் லோக்கல் மற்றும் இண்டர்நேஷனல் கால்ஸ் பேசிக் கொள்ளலாம். இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
BSNL Datapack plans
ரூ.151 பிளான்
ரூ.151 விலை கொண்ட இந்த பிளானில் மொத்தமாக 40 ஜிபி டேட்டா வழங்கப்படும். கால்ஸ் வசதி ஏதும் கிடையாது. மொத்த வேலிடிட்டி 30 நாட்களாகும்.
ரூ.198 பிளான்
ரூ.198 விலை கொண்ட இந்த பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். 2ஜிபி டேட்டா முடிந்தாலும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் கால் வசதி கிடையாது. வேலிடிட்டி 40 நாட்கள்.
டெலிகாம் நிறுவனங்களுக்கு செக்! பழைய 2G சிம் கார்டு இருந்தா கொண்டாட்டம்தான்!