டெலிகாம் நிறுவனங்களுக்கு செக்! பழைய 2G சிம் கார்டு இருந்தா கொண்டாட்டம்தான்!

First Published | Dec 24, 2024, 1:19 AM IST

ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. 2ஜி சேவைகள் அல்லது இரண்டு சிம் கார்டுகள் தொடர்பாக புதிய விதிகள் வெளியாக உள்ளன. டெலிகாம் நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

SIM Card New Rules

இன்றைய டிஜிட்டல் உலகில், பலர் ஒரே மொபைலில் இரட்டை சிம் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில், 2ஜி சேவையைப் பயன்படுத்தும் பல பயனர்கள் இன்னும் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், இரட்டை சிம் அல்லது 2ஜி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் பயனர்களுக்கு அரசாங்கத்திலிருந்து சில பெரிய அறிவிப்புகள் வெளிவரக்கூடும் என்று தெரிகிறது.

Telecom companies

டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் + எஸ்எம்எஸ் பேக்கை தனியாக வழங்க வேண்டும் என் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI விரைவில் வழிகாட்டுதல்களை வெளியிடலாம் எனத் தெரிகிறது.

Tap to resize

SIM Cards

பல பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் இரண்டு சிம்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு சிம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மொபைல் எண்கள் அரசாங்கத்தின் சொத்து என்று ஒழுங்குமுறை ஆணையம் கூறுகிறது. இவை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் மட்டும் வழங்கப்படுகின்றன.

Double SIM

இந்நிலைநில், பலர் இன்னும் 2ஜி சேவைகள் அல்லது இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். டெலிகாம் நிறுவனங்கள் பொதுவாக டேட்டாவுடன் கூடிய வாய்ஸ் + எஸ்எம்எஸ் பேக்குகளை வழங்குகின்றன. ஆனால் பொதுவாக பெரும்பாலான பயனர்கள் ஒரு சிம்மில் இருந்தே இன்டர்நெட் உட்பட அனைத்து வசதிகளையும் பயன்படுத்துகிறார். இரண்டாவது சிம்மில் இருந்து குரல் மற்றும் எஸ்எம்எஸ் சேவை மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அதையும் அதிகமாகப் பயன்படுத்துவது இல்லை.

2G users

இதனால் பயனர்கள் இரண்டு சேவைகளுக்கு அதிக பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், டெலிகாம் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தயாராகி வருகிறது.

TRAI

இந்தியாவில் இன்னும் 2G வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 கோடி என்று கூறப்படுகிறது. தற்போது டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் பேக்குகள் அந்த வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளன. இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு டிராய் வாய்ஸ் கால் மற்றும் சாதாரண மெசேஜ் வசதிகள் மட்டும் பயன்படுத்துவதற்கான ரீசார்ஜ் திட்டங்களை எல்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்று அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. இது 2G சிம் கார்டு பயனர்களுக்கும்  2 சிம் கார்டுகளை வைத்திருக்கும் பயனர்களுக்கும் செலவைக் குறைக்கும் வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!