BSNL: வெறும் 4 ரூபாயில் 1ஜிபி டேட்டா; 28 நாள் வேலிடிட்டி; அட்டகாசமான பிஎஸ்என்எல் பிளான்!

First Published | Jan 21, 2025, 1:24 PM IST

பிஎஸ்என்எல் 4 ரூபாயில் 1 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

BSNL Recharge Plan

பிஎஸ்என்எல் பிளான்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்‍‍‍ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் ஒதுங்கி வருகின்றனர்.

பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையையே இன்னும் செயல்படுத்தாத நிலையிளூம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து இருப்பதற்கு அது குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருவதே காரணமாகும். அந்த வகையில் பிஎஸ்என்எல் மிகவும் குறைந்த விலையில் டேட்டா வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை என்னென்ன திட்டங்கள்? என்பது குறித்து பார்ப்போம்.

BSNL BEST PLAN

பிஎஸ்என்எல் ரூ.108 திட்டம் 

பிஎஸ்என்எல் ரூ.108 விலை கொண்ட மலிவு விலை திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்  வேலிட்டி 28 நாட்கள். தினமும் 1ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். மேலும் அன்மிலிடெட் கால்ஸ் வசதி, 500 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதிகள் உள்ளன. தினமும் 1ஜிபி டேட்டா தீர்ந்து விட்டாலும்,  40 கேபிபிஎஸ் வேகத்தில் நீங்கள் இணையத்தை பயன்படுத்தலாம். இதனால் தடையில்லா டேட்டா உங்களுக்கு கிடைக்கிறது.

ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை எப்படி வாங்குவது? இந்த '5' அம்சங்களை பார்த்தால் போதும்! முழு விவரம்!
 


BSNL Data Plan

தினமும் 4 ரூபாய் தான் 

இந்த திட்டத்தை ஒரு நாளின்படி கணக்கு பார்த்தால் ஒரு நாளைக்கு 4 ரூபாய் தான் வருகிறது. இந்த 4 ரூபாயில் உங்களால் தினமும் 1ஜிபி டேட்டா பெற முடியும். இதேபோல் பிஎஸ்என்எல் ரூ.147 என்ற விலையில் மலிவு திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இந்த பிளானில் மொத்தமாக 10ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகியவை பெறலாம். 
 

BSNL Budget Plan

விலை உயர்த்தாத பிஎஸ்என்எல்

இதுமட்டுமின்றி ரூ.49 என்ற விலையிலும் பிஎஸ்என்எல் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் டேட்டா தவிர அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன என்பதை உங்களுக்குச் சொல்லுவோம். ஆனால் பிஎஸ்என்எல் எந்த விலையையும் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

JIO வாடிக்கையாளர்களுக்கு ஷாக்; பிரபலமான ரீசார்ஜ் பிளான் விலையை உயர்த்திய ஜியோ; முழு விவரம்!

Latest Videos

click me!