இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழுக்க போட்டி போட்டு தள்ளுபடியை வாரி வழங்கி வருவதால் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதுவும் இப்போது பிரபலமான பிராண்ட்களின் ஸ்மார்ட் டிவிகள் கூட ரூ.10,000 விலைக்குள் கிடைக்கிறது.
நீங்கள் 32 இன்ஸ் ஸ்மார்ட் டிவிகள் முதல் 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வரை 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இப்படி குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளில் ஒரு சில டிவிகள் தான் நல்ல தரத்துடன் நீடித்து உழைக்கின்றன. பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் அவற்றை வாங்கிய சில நாட்களில் வேலையை காட்டி விடுகின்றன. டிஸ்பிளே பிரச்சனை, ஒளிபரப்பு பிரச்சனை, சவுண்ட் பிரச்ச்னை என குறைந்த விலை ஸ்மார்ட் டிவிகளில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் கூறப்படுகின்றன.