தினமும் 2 ஜிபி டேட்டா; அதுவும் 100 ரூபாய்க்குள்! BSNL-ன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்!

First Published | Nov 28, 2024, 1:16 PM IST

BSNL ரூ.100க்குள் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் தினசரி 2GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் பல நன்மைகளை வழங்குகின்றன.

BSNL Best Prepadi Plans

தனியார் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை அதிக விலைக்கு கொண்டு வரும் நிலையில், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமானBSNL மிகவும் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், நீங்கள் ரூ.100 பட்ஜெட்டில் ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், பல திட்டங்களை வழங்கும் ஒரே நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டுமே. BSNL இன் ரூ.100ல் 5 ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

BSNL Best Prepadi Plans

BSNL ரூ 97 திட்டம்: 

BSNL இன் ரூ.97 திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மொத்தம் 30ஜிபி கிடைக்கும். இத்திட்டத்தின். செல்லுபடியாகும் காலம் 15 நாட்கள் ஆகும். குரல் அழைப்பைப் பொறுத்தவரை, இந்த திட்டம் வரம்பற்ற உள்ளூர்/எஸ்டிடி/ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் டெல்லி மற்றும் மும்பை பயனர்களுக்கு சிறந்தது. அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறையும்.. 

Tap to resize

BSNL Best Prepadi Plans

BSNL ரூ 98 திட்டம்:

BSNL ரூ.98 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 18 நாட்கள் ஆகும். அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைகிறது.

BSNL Best Prepadi Plans

BSNL ரூ.58 திட்டம்:

பிஎஸ்என்எல்லின் ரூ.58 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. செல்லுபடியாகும் காலம் 7 ​​நாட்கள் ஆகும். அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைகிறது.

BSNL ரூ 94 திட்டம்:

பிஎஸ்என்எல்லின் ரூ.94 திட்டமானது மொத்தம் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு 200 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

BSNL Best Prepadi Plans

BSNL ரூ 87 திட்டம்:

பிஎஸ்என்எல்லின் ரூ.87 திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது மொத்தம் 14ஜிபி. இந்த திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. குரல் அழைப்பு பற்றி பேசுகையில், இந்த திட்டம் வரம்பற்ற உள்ளூர்/எஸ்டிடி அழைப்பை வழங்குகிறது. தினசரி அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைகிறது. இந்த திட்டம் ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவையையும் வழங்குகிறது. இந்த திட்டம் டெல்லி மற்றும் மும்பை பயனர்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. 

Latest Videos

click me!