Budget 5G Smartphones Under 15000
போனின் சிப்செட் நன்றாக இருந்தால் கேமிங், இன்டர்நெட் பிரவுசிங், போட்டோகிராபி போன்ற பணிகளை எளிதாக செய்யலாம். பட்ஜெட்டில் இருக்கும் அதே நேரத்தில் சிறந்த ஃபோனை வாங்க நினைத்தால், கீழ்கண்ட சிறந்த 5 ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.
iQOO Z9x
ஐக்யூ (iQOO Z9x) இந்த ஆண்டு மே மாதம் வெளியானது. இந்த போனின் விலை ரூ.12,499 முதல் தொடங்குகிறது. இது Snapdragon 6 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது தவிர, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளது. இந்த பிரிவில் உள்ள சிறந்த பேட்டரி பேக்கப் போன்களில் இதுவும் ஒன்றாகும்.
Vivo T3x
விவோ டி3எக்ஸ் (Vivo T3x) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Snapdragon 6 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரூ.15,000 க்கு கீழ் உள்ள இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.12,999. அதன் பிரிவில் உள்ள சிறந்த கேமிங் போன்களில் இதுவும் ஒன்றாகும்.
Moto G64
மோட்டோ ஜி64 (Moto G64) இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சந்தையில் நுழைந்தது. இந்த ஃபோனில் MediaTek Dimensity 7025 சிப்செட் ஆதரவு உள்ளது. இது தவிர, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வழங்கப்படுகிறது. இந்த போனின் விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது. வேகமாக சார்ஜ் செய்யும் போன்களில் ஒன்றாகும்.
Moto G45
மோட்டோ ஜி45 (Moto G45) சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஃபோன் Snapdragon 6s Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது உங்களின் அன்றாட வேலை மற்றும் மல்டி டாஸ்கிங் பணிகளுக்கு உங்களுக்கு நன்றாக துணைபுரியும். இந்த போனின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது.
Redmi 13
ரெட்மி 13 (Redmi 13) ஆனது ரூ. 15,000க்குள் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, Redmi 13 ஆனது Snapdragon 4 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் பெறுகிறது. ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த கேமரா போன்களில் இதுவும் ஒன்று.
ரூ.5 லட்சம் கூட இல்லை.. பேமிலியா அசால்ட்டா டூர் போக ஏற்ற 3 பட்ஜெட் கார்கள்!