
ஆப்பிள் ஐபோன்: ஐபோன்கள் உலகளவில் அதிக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ஆப்பிளின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன அம்சங்கள் நிரம்பியிருப்பது மட்டுமல்லாமல், ஸ்டேட்டஸ் குறியீடாகவும் உள்ளன. 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விற்பனை மூலம் சுமார் 39 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. ஐபோன்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், அச்சு அசல் ஐபோன் போலவே இருக்கும் போலி போன்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
உங்கள் ஐபோன் ஒரிஜினலா?: ஆப்பிள் ஸ்டோர் போன்ற நம்பகமான கடைகளில் இருந்து ஐபோன் வாங்கினால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களிடம் வாங்கினால் நீங்கள் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. ஆப்பிள் அங்கீகாரம் பெறாத கடைகளில் ஐபோன்களை பழுதுபார்ப்பதற்குக் கொடுக்கும் போலியான ஐபோன்களை மாற்றிக் கொடுக்கிறார்கள் என்றும் புகார்கள் வருகின்றன.
இந்நிலையில், நீங்கள் வாங்கும் புதிய ஐபோன் ஒரிஜினல்தானா, அல்லது டூப்ளிகேட் ஐபோனா என்பதைச் சரிபார்க்க சில வழிகள் உள்ளன. ஆப்பிள் ஐபோன்களுக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்டு போலி ஐபோன்களைக் கண்டுபிடிக்கலாம்.
பேக்கேஜிங் மற்றும் பாகங்கள்: உங்கள் ஐபோனின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முதலில் பேக்கேஜிங் மற்றும் பாகங்களை ஆராய வேண்டும். ஆப்பிள் அதன் பேக்கேஜிங்கில் கூட, தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்கிறது. உண்மையான ஐபோன் பேக் செய்யப்படும் பெட்டிகள் உறுதியானவை. உயர்தரமான படங்கள் மற்றும் துல்லியமான வடிவமைப்பைக் கொண்டவை.
பாக்ஸ் உள்ளே இருக்கும் இதர பாகங்கள் ஆப்பிள் தயாரிப்புகளின் தரத்துடன் பொருந்த வேண்டும். தரமற்ற அச்சு, தளர்வான பேக்கேஜிங் அல்லது பொருந்தாத பாகங்கள் இருந்தால் போலி ஐபோனாக இருக்கலாம்.
வரிசை எண் மற்றும் IMEI எண்: மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே, ஐபோனிலும் தனித்துவமான வரிசை எண் மற்றும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (IMEI) உள்ளது. சீரியல் நம்பரைக் கண்டறிய, Setting > General > About என்ற வழியில் செல்லவும். பின்னர், ஆப்பிளின் செக் கவரேஜ் பக்கத்திற்குச் சென்று சீரியல் நம்பர் டைப் செய்து சமர்ப்பிக்கவும். உங்கள் ஐபோன் உண்மையானதாக இருந்தால், ஐபோன் மாடல், வாரண்டி ஸ்டேட்டஸ் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களைக் காண்பிக்கும்.
IMEI எண்ணை சரிபார்க்க, உங்கள் ஐபோனில் *#06# என டயல் செய்யவும். திரையில் காட்டப்படும் எண்ணை, பாக்ஸில் உள்ள எண்ணுடன் ஒப்பிடவும். பின், சிம் ட்ரேயில் உள்ள IMEI எண்ணுடனும் ஒப்பிடவும். ஒரிஜினல் ஐபோனாக இருந்தால் எல்லா எண்களும் பொருந்த வேண்டும்.
மொபைலில் IMEI நம்பர் என்றால் என்ன? அதைத் தெரிந்துகொள்வது எப்படி?
ஐபோனின் தயாரிப்பு தரம்: ஆப்பிள் ஐபோன்கள் பிரீமியம் தோற்றத்தையும் உறுதியான கட்டமைப்பையும் கொண்டவை. நீங்கள் வாங்கியது உண்மையான ஐபோன் என்றால், அது தளர்வான பாகங்களைக் கொண்டிருக்காது. திடமான கட்டமைப்பு கொண்டதாக இருக்கும். பின்புறத்தில் உள்ள ஆப்பிள் லோகோ துல்லியமாக இருக்கும்.
திரையின் அளவு, காட்சி தரம், எடை மற்றும் தடிமன் ஆகியவை அதிகாரப்பூர்வ மாடலில் உள்ள விவரக்குறிப்புகளுடன் பொருந்த வேண்டும். சிம் ட்ரேயை அகற்றி ஸ்லாட்டை ஆய்வு செய்யவும். பெரும்பாலும் போலி ஐபோன்களில் தவறான லோகோக்கள் அல்லது தளர்வான பட்டன்கள் போன்ற குறைபாடுகள் இருக்கும். கூர்ந்து கவனித்தால் இந்தக் குறைகளை எளிதாகக் கண்டறியலாம். துல்லியமாகத் தெரிந்துகொள்ள லென்ஸ் பயன்படுத்தியும் சோதனையிடலாம்.
அடிக்கடி வரும் ஸ்பேம் கால் தொல்லைக்கு முற்றுப்புள்ளி! இதை மட்டும் பண்ணுங்க!!
ஐபோன் சாப்ட்வேர் அம்சங்கள்: போலி ஐபோனைக் கண்டறிவதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று அதன் மென்பொருள். உண்மையான ஐபோன்கள் ஆப்பிளின் iOS இல் இயங்குகின்றன. உங்கள் மொபைல் iOS இன் சமீபத்திய பதிப்பில் இயங்குகிறதா என்பதை Settings > General > Software Update என்ற வழியில் சென்று சரிபார்க்கலாம்.
iOS போன்று தோற்றத்துடன் ஆண்டிராய்டில் இயங்கும் போலி ஐபோன்கள் பற்றி சமூக ஊடகங்களில் அடிக்கடி புகார்கள் வருகின்றன. உண்மையான ஐபோன் iOS இல் மட்டுமே இயங்கும். ஐபோனில் பவர் பட்டனைப் பிடித்து அல்லது "ஹே சிரி" என்று சொல்லி Siri அசிஸ்டெண்ட்டை பயன்படுத்த முயற்சி செய்யவும். Siri செயல்படவில்லை என்றால், உங்கள் ஐபோன் போலியானதாக இருக்கலாம்.
ஆப்பிள் சேவை மையம்: உங்கள் ஐபோன் போலியானது என்று கண்டறிந்தால் அல்லது உங்கள் ஐபோனின் நம்பகத்தன்மை குறித்து உறுதியாக தெரியாவிட்டால், அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம். ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை நிபுணர்கள் உங்கள் ஐபோனை சரிபார்க்க உதவி செய்வார்கள்.
எந்த நேரமும் ஈசியா பேட்டரிமாற்றலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெற லெவல்!