விமான நிலையத்திற்கு செல்பவர்களே உஷாரா இருங்க.. அதிகரிக்கும் மோசடிகள்!

First Published | Nov 11, 2024, 3:33 PM IST

கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நாட்டின் பல்வேறு நகர விமான நிலையங்களில் ஓய்வறைகள் முன்பதிவு செய்ய முயன்ற பலர் இந்த மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

Airport Passenger Alert

அடிக்கடி விமானப் பயணம் செய்பவர்கள், விமானம் தாமதமாகும்போது, விமான நிலைய ஓய்வறைகளில் காத்திருப்பது வழக்கம். கடந்த சில மாதங்களில், இதுபோன்ற ஓய்வறைகளைத் தேடும் பல பயணிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

Flight

சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் தனது மொபைல் செயலியில் இதுபோன்ற ஒரு ஓய்வறையை முன்பதிவு செய்ய முயன்றபோது சிக்கலில் மாட்டிக் கொண்டார். மோசடி செய்பவர்கள் அவரது வங்கிக் கணக்கை காலி செய்துவிட்டதாகத் தெரிகிறது.

Tap to resize

Airport Lounge Scam

கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை, நாட்டின் பல்வேறு நகர விமான நிலையங்களில் ஓய்வறைகள் முன்பதிவு செய்ய முயன்ற பலர் இந்த மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

Fake Lounge App

பெங்களூரில் 'கிளவுட்செக்' என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் 'லவுஞ்ச் பாஸ்' என்ற போலி செயலி சமூக ஊடகங்களில் பரவி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த செயலியின் இணைப்பு வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

130 கிமீ ரேஞ்ச் ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 33 ஆயிரம் தள்ளுபடியில் கிடைக்கிறது!

Airport Lounge Booking

விமான நிலையத்திற்குச் செல்லும் அவசரத்தில், பலர் இந்த செயலியைப் பதிவிறக்கி ஓய்வறைகளை முன்பதிவு செய்ய முயற்சி செய்கிறார்கள். இதனால் அறியாமலேயே மோசடி செய்பவர்களின் வலையில் விழுகின்றனர்.

Online Fraud

கிளவுட்செக்கின் ஆய்வின்படி, ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சுமார் 450 பயணிகள் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர். ஆனால், அனைத்து புகார்களும் பதிவு செய்யப்படவில்லை என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

Whatsapp Scam

விமான நிலையத்தில் உதவி செய்வதாகக் கூறி, பல பயணிகளை 'லவுஞ்ச் பாஸ்' செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி மோசடி செய்பவர்கள் கூறுவதாக கிளவுட்செக் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் இணைப்புகளும் அனுப்பப்படுகின்றன. நீங்கள் அதைப் பதிவிறக்கியதும், உங்கள் பயோமெட்ரிக் தகவலை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள்.

ரூ.1000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்: 1 கோடி பெற எத்தனை ஆண்டுகள் ஆகும்?

Latest Videos

click me!