பிஎஸ்என்எல் மாஸ்டர் பிளான்! மாதம் 126 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு வருட வேலிடிட்டி!

Published : Nov 10, 2024, 12:13 PM ISTUpdated : Nov 10, 2024, 12:27 PM IST

ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகியவற்றை விட பிஎஸ்என்எல்லின் திட்டங்கள் மிகவும் மலிவாக உள்ளன. மாதம் 126 ரூபாய் செலவில் தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பல பலன்களைப்ப பெறலாம்.

PREV
15
பிஎஸ்என்எல் மாஸ்டர் பிளான்! மாதம் 126 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு வருட வேலிடிட்டி!
BSNL

ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகியவற்றை விட அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் திட்டங்கள் மிகவும் மலிவாக உள்ளன. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் அனைவரின் பட்ஜெட்டிற்கும் ஏற்ப ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன.

25
BSNL plans

பிஎஸ்என்எல் எப்போதும் மலிவு விலை திட்டங்களுக்கு பெயர் பெற்றது. BSNL பல வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக இருந்தால், வெறும் 126 ரூபாய் மாதாந்திரச் செலவில் வருடம் முழுவதும் பல பலன்களைப் பெறலாம்.

35
BSNL 1515 plan

பிஎஸ்என்எல் ரூ.1,515 திட்டம் ஒரு வருட வேலிடிட்டி (365 நாட்கள்) கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அதாவது, இந்த திட்டத்தில் மொத்தம் 720GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் வரம்பற்ற வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம்.

45
BSNL Affordable Plan

இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அதிவேக டேட்டா தீர்ந்த பிறகும், 40Kbps வேகத்தில் இணையம் கிடைக்கும். எந்த OTT இயங்குதளத்தின் சந்தாவும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த பிஎஸ்என்எல் திட்டம் அதிக டேட்டாவைத் தேவைப்படுபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். பலர் பிஎஸ்என்எல் எண்ணை இரண்டாம் எண்ணாகவே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு இந்த பிளான் பொருத்தமாக இருக்கும்.

55
BSNL 1499 plan

பிஎஸ்என்எல் ரூ.1,499 திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்திலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம். இதிலும் டேட்டா தீர்ந்த பிறகும், 40Kbps வேகத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்புது இந்தத் திட்டத்தின் சிறப்பு.

Read more Photos on
click me!

Recommended Stories