வந்துவிட்டது Airtel 5G.. திருநெல்வேலி, வேலூர், சேலம், திருப்பூர் மக்கள் இனி ஜமாய்க்கலாம்!

First Published | Mar 8, 2023, 11:36 PM IST

தமிழகத்தில் Airtel 5G சேவை திருநெல்வேலி, வேலூர், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.

பார்தி ஏர்டெல் நிறுவனம், 125 நகரங்களில் தனது அல்ட்ராஃபாஸ்ட் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் ஏற்கெனவே ஏர்டெல் 5ஜி இருந்தது. தற்போது கூடுதலாக, வேலூர், சேலம், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையானது இப்போது மொத்தம் 265 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. 
 

5ஜி ஆன் செய்வது எப்படி?

முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்க் ஆப்புக்கு செல்லவும். அங்கு, 'Wi-Fi & Networks' ஆப்ஷனுக்குச் செல்லவும். சில ஃபோன்களில் அது நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் என இருக்கலாம். அடுத்து, சிம் அல்லது சிம் & நெட்வொர்க் ஆப்ஷனை டேப் செய்யவும். 

பேஜை கீழே ஸ்க்ரோல் செய்து, பின்னர் விருப்பமான நெட்வொர்க் வகை (ஃபேவரட் நெட்வொர்க் டைப்) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.  உங்கள் ஸ்மார்ட்போன் 5G நெட்வொர்க் வசதி இருந்தால், 4G, 3G ஆகியவற்றுடன் 5G விருப்பத்தைப் பார்ப்பீர்கள். ஒருவேளை , ஃபோன் 5ஜி இல்லையெனில் என்றால், அதில் 5G ஆப்ஷன் இருக்காது. அதாவது உங்கள் தொலைபேசி 5G உடன் வேலை செய்யாது. உங்கள் போன் 5Gஐ ஆதரிக்கவில்லை என்றால், 5G இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

Tap to resize

இந்தியாவில் ஏர்டெல் 5ஜி புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இடங்கள்:

மத்தியப் பிரதேசம்- தேவாஸ், ஜபல்பூர், சாகர், சத்தர்பூர், மோவ், பிதாம்பூர்

உத்தரப் பிரதேசம்- ஜான்சி, அயோத்தி, ஷாஜஹான்பூர், ரேபரேலி, பாரபங்கி, சண்டௌலி, பண்டா, ஹர்தோய், மஹராஜ்கஞ்ச், குஷிநகர், ஜான்பூர், பல்ராம்பூர், மௌ, கோண்டா, பரேலி, அலிகார்

ராஜஸ்தான்-பிவாடி, பாலி, கங்காநகர், சிகார்

சத்தீஸ்கர்- பிலாஸ்பூர்

பஞ்சாப்-லூதியானா, டெராபஸ்ஸி, காரர், ஜிராக்பூர்

பீகார்- ஃபதுஹா, அராரியா, ஜெகனாபாத், ஃபோர்பஸ்கஞ்ச், மோதிஹாரி, சிவன், சஹர்சா, மதேசராஜ் ஜமுய், கயா, ககாரியா, பெட்டியா

Oppo Flip phone | ஓப்போ பிரியர்களே இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்க!

5G network 5 g network

ஆந்திரப் பிரதேசம்-கடப்பா, ஓங்கோல், எலுரு, விஜயநகரம், நெல்லூர், அனந்தபூர்

அசாம்-ஜோர்ஹாட், தேஜ்பூர்

குஜராத்- நவ்சாரி, மோர்பி, சுரேந்திரனா, ஜுனாகத், வாபி, தஹேஜ், பருச், ஆனந்த், பாவ்நகர், அங்கலேஷ்வர், ஜாம்நகர், நதியாட், கடோதரா, மெஹ்சானா, கலோல், புஜ், காந்திதாம், முந்த்ரா, பாலன்பூர் 

இமாச்சலப் பிரதேசம் - மணாலி, சோலன், காங்க்ரா, குலு, பாலம்பூர், நலகர்

ஜார்கண்ட்- தியோகர், ஆதித்யபூர், தன்பாத், பொகாரோ ஸ்டீல் சிட்டி, ராம்கர் கண்டோன்மென்ட், குந்தி, ஹசாரிபாக்

கேரளா-பொன்னானி, களமசேரி, திருரங்கடி, வெங்கரா, திருப்புனித்துரா, திரூர், கொல்லம், எடத்தலா, மூவாட்டுப்புழாறு, பாலக்காடு, செருவன்னுர், வாழக்கார், காயம்குளம்

கர்நாடகா - மங்களூர், மைசூர்

மணிப்பூர்- சுராசந்த்பூர்

மகாராஷ்டிரா- துலே, நாசிக், அச்சல்பூர், உட்கிர், யவத்மால் சிட்டி, சின்னார், பண்டாரா சிட்டி, ஔரங்காபாத் கம்கான், ஜல்கான், பர்பானி, தானே, புல்தானா ஒடிசா-கேந்திரபாரா, ஜாஜ்பூர் சாலை, போலங்கிர், தல்சர்

தமிழ்நாடு- வேலூர், சேலம், திருப்பூர், திருநெல்வேலி 

தெலுங்கானா- நிஜாமாபாத், கம்மம், ராமகுண்டம்

Latest Videos

click me!