Moto G73 5G launch on March 10: குறைந்த விலையில் நிறைந்த அம்சங்கள்

First Published | Mar 8, 2023, 6:22 PM IST

மோட்டோரோலா நிறுவனத்தின் புத்தம் புதிய Moto G73 5G ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 10 ஆம் தேதி அறிமுகமாகிறது. Moto G73 5G to launch in India on March 10. இந்த நிலையில், அறிமுகமாகுவதற்கு முன்பே அதிலுள்ள அம்சங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
 

Moto G73 ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த போன் முதன்முதலில் ஜனவரியில் உலகளவில் அறிமுகமானது, அதே போன் சிறு மாற்றங்களுடன் தற்போது இந்தியாவில் வர உள்ளது. இதன் விலை சுமார் ரூ.20,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, Redmi Note 12 5G, Realme 10 Pro வகையான ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக மோட்டோ இருக்கும்.

மொத்தம் இரண்டு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை: மிட்நைட் ப்ளூ, லூசன்ட் ஒயிட் ஆகும்.  8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு என்ற ஒரே ஒரு மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகிறது. இது தவிர 256 ஜிபி மெமரி கொண்ட ஜி-சீரிஸ் வேரியண்ட் உள்ளது, ஆனால், இந்தியாவில் அது வரவில்லை.
 

Moto G73 5G சிறப்பம்சங்கள்:

Moto G73 5G ஆனது FHD+ துல்லியம், 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்ப்ளே பேனல் எல்சிடி, 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டுன் வருகிறது. ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருந்தாலும், கண்ணாடி போன்ற பளபளப்பான பூச்சு உள்ளது.. பழைய மோட்டோரோலா ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் இதே டிசைன் பயன்படுத்தப்பட்டது.

பின்புறத்தில், இது டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. அதில் முழு-எச்டி வீடியோக்களை 60fps இல் வீடியோ பதிவு செய்ய முடியும். 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா லென்ஸும் உள்ளது. போனில் பல தரப்பட்ட எஃபெக்ட்கள் உள்ளன. அல்ட்ரா-ரெஸ் டூயல் கேப்சர், ஸ்பாட் கலர், நைட் விஷன், மேக்ரோ விஷன், போர்ட்ரெய்ட், லைவ் ஃபில்டர், பனோரமா, ஏஆர் ஸ்டிக்கர்கள், ப்ரோ மோட், ஸ்மார்ட் கலவை மற்றும் ஆட்டோ ஸ்மைல் கேப்சர் போன்ற அம்சங்கள் உள்ளன. 

Oppo Flip phone | ஓப்போ பிரியர்களே இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்க!

முன்பக்க கேமரா குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை, இருப்பினும் இது முழு-எச்டி வீடியோக்களை 30fps இல் பதிவு செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Moto G73 5G ஆனது "ஹைப்ரிட் டூயல்-சிம்" கொண்டுள்ளது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளன. கைரேகை ரீடர், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் 5ஜி ஆதரவு (12 பேண்டுகள்) ஆகியவை உள்ளன. ஆண்ட்ராய்டு 13, மீடியாடெக் டிமன்சிட்டி 930 பிராசசர் இருப்பதால் திறன்மிக்கதாக இருக்கும். 

click me!