இந்தியாவில் அண்மையில் OnePlus 11 5G, OnePlus 11R 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. இவையிரண்டும் ப்ரீமியம், மிட்ரேஞ்ச் பிரீமியம் ஸ்மார்ட்போன்களாகும். இதனைத் தொடர்ந்து தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் மலிவு விலையில் OnePlus Nord CE 3 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு OnePlus Nord CE 2 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல் இந்தாண்டும் ஜூன், ஜூலை காலக்கட்டங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே MySmartPrice தளத்தில் சில விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி, ஒன்பிளஸ் நார்டு சிஇ2 ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 782G SoC மற்றும் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டிஸ்ப்ளே பொறுத்தவரையில் 120Hz ரெப்ரெஷ் ரேட், Full-HD+ டிஸ்ப்ளே, அதிலேயே பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேனர் இருக்கலாம். ஸ்னாப்டிராகன் 782 SoC பிராசசர், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் இணைக்கப்படலாம். பின்புறம் 50 மெகாபிக்சல் (IMX890) கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பு கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் கேமரா இருக்கலாம். மற்றபடி முக்கிய அம்சங்களில் 80W வேகமான சார்ஜிங் வசதி, 5G மற்றும் NFC உடன் 5,000mAh பேட்டரி இருக்கலாம்.
Vivo V27 Pro, Vivo V27 வந்துவிட்டது.. நம்பி வாங்கலாமா? என்ன சிக்கல்கள் உள்ளன?
OnePlus Nord CE 3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, ஃபோனின் விலை ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை இருக்கலாம். ஏனெனில், இதற்கு முன்பு கடந்த ஆண்டு OnePlus Nord CE 2 வெளியாகும் போது ரூ.23,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 6GB RAM + 128GB மெமரி இருந்தது. எனவே, அதேபோல் இம்முறையும் சுமார் 25 ரூபாய் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் நார்டு சிஇ 3 எதிர்பார்க்கப்படுகிறது.