USB டைப் ‘சி’ உடன் களமிறங்கும் ஐபோன் 15.. ஆனால் ஒரு சிக்கல்!

First Published Mar 2, 2023, 7:52 PM IST

ஐபோன் 15 முதன்முறையாக டைப் ‘சி’ போர்ட்டுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் ஐபோன் கேபிளை தவிர மற்ற கம்பெனி கேபிள்கள் ஏற்கப்படாது என்று தகவல்கள் வந்துள்ளன. 

iPhone 15 for next year, do you know these facts

ஆப்பிள் நிறுவனம் இதுவரையில் அதனுடைய ஐபோன்களில் பிரத்யேகமாக லைட்னிங் கேபிளை மட்டுமே வழங்கி வந்தது. உலகம் முழுவதும் பல்வேறு சாதனங்களில் யுஎஸ்பி டைப் ‘சி’ வகை சார்ஜர்கள், கேபிள்கள் ஏற்றுக்கொண்ட பிறகும், ஆப்பிள் நிறுவனம் மட்டும் விடாப்பிடியாக லைட்னிங் கேபிளை விட்டு மாறாமல் இருந்தது. 

இதனிடையே ஐரோப்பிய ஒன்றியம் இயற்றிய சட்டத்தின் காரணமாக, வாடிக்கையாளர்கள் சார்ஜ் செய்வதற்கு வசதியாக அனைத்து சாதனங்களிலும் ஒரே சார்ஜிங் வகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் மூலம் டைப் சி போர்ட் கொண்ட ஐபோன்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில், ஐபோனில் டைப் சி வர இருப்பதாக சில தளங்களில் செய்திகள் வந்துள்ளன. 

iPhone 15 and iPhone 15 Pro different USB-C port

இந்த நிலையில், வரும் ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் டைப் சி இருந்தால் கூட, பிற கம்பெனிகளின் டைப் சி கேபிள்கள் வரம்பிற்கு உட்பட்டு தான் செயல்படும் என்று கூறப்படுகிறது.  வரவிருக்கும் நிலையான ஐபோன் 15 மாடலில் ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் அம்சம் இருக்கும் என்றும் தெரிகிறது. இதற்கு முன்பு வெளியான ஐபோன் எக்ஸ் விட ஐபோன் 15 மாடலில் டைனமிக் ஐலேண்ட் சிறப்பானதாக இருக்கும்.

டுவிட்டருக்கு போட்டியாக வந்துள்ள Bluesky.. முன்னாள் ஊழியர்களின் பதிலடி!

வழக்கமான மாடல்களுடன் பழைய ஃபிளாக்ஷிப் அம்சங்களையும் சேர்த்து புதிய உத்தியை ஆப்பிள் பின்பற்றலாம், அதேசமயம் பிரீமியம் மாடல்களில் புதிதாக A17 பயோனிக் SoC பிராசசர் சிப் இருக்கலாம். அல்லது ஐபோன் 14 சீரிஸ் போலவே ஐபோன் 15 மாடலிலும் A16 பயோனிக் சிப் எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இது தொடர்பான முழுமையான விவரங்கள் ஆப்பிள் தரப்பில் வரும், அப்போது யுஎஸ்பி டைப் சி எந்தளவு பயனுள்ளதாக அமையும் என்பது தெரிய வரும்.
 

click me!