Vivo V27 Pro, Vivo V27 வந்துவிட்டது.. நம்பி வாங்கலாமா? என்ன சிக்கல்கள் உள்ளன?

First Published | Mar 3, 2023, 2:41 PM IST

இந்தியாவில் விவோ வி27, வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில், அவற்றின் செயல்திறன் எப்படி உள்ளது, விலைக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் உள்ளனவா என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு Vivo V25 சீரிஸ் வந்தது. அதற்கு அடுத்தபடியாக தற்போது Vivo V27 Pro, Vivo V27 தற்போது அறிமுகமாகியுள்ளது. இரண்டு மாடல்களும் Funtouch OS 13 தளத்தில், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. உயர்நிலை மீடியாடெக் பிராசசர், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், வளைந்த முனனை ஆகியவை கொண்டுள்ளன. 

பின்புறத்தில் நிறம் மாறும் கண்ணாடி பேனல்கள் இருப்பது பார்வையாக உள்ளது.  கூடுதலாக, இரண்டு மாடல்களும் ட்ரிபிள் கேமராக்களுடன் வருகின்றன. Vivo V27 Pro ஆனது மீடியாடெக் டிமன்சிட்டி 8200 SoC பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது, அதே சமயம் விவோ வி27 போனில் மீடியாடெக் டிமன்சிட்டி 7200 5G SoC பிராசசர் உள்ளது.
 

Vivo V27 Pro, Vivo V27: விலை மற்றும் ஆஃபர்கள்

விவோ வி27 ப்ரோ: 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.37,999  என்று அறிமுகமாகியுள்ளது. இதே போனில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999 என்றும்,  12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 42,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 6 ஆம் தேதி முதல் இதற்கான விற்பனை தொடங்குகிறது.
 

Tap to resize

Vivo V27:  8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.32,999  என்று அறிமுகமாகியுள்ளது. இதே போனில் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.36,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் இரண்டு விதமான நிறங்கள் உள்ளன. அவை: மேஜிக் ப்ளூ மற்றும் நோபல் பிளாக் ஆகும். 

விவோ வி27, விவோ 27 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், விவோவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு உள்ளன. விற்பனை மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும்.

Vivo V27 launch in India: இந்தியாவில் Vivo V27 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ

Vivo V27 Pro, Vivo V27: சிறப்பம்சங்கள்

Vivo V27 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்டுள்ளன. Vivo V27 Pro மற்றும் Vivo V27 இரண்டும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான FunTouch OS 13 இல் இயங்குகிறது. டூயல் சிம் (நானோ) போன்களாகும். இவை இரண்டும் 120Hz ரெப்ரெஷ் ரேட், 6.78-இன்ச் முழு-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. .

முக்கியமான ஒரே வித்தியாசம் பிராசசர் தான். Vivo V27 Pro ஆனது 4nm மீடியாடெக் டிமன்சிட்டி 8200 SoC பிராசசர் உள்ளது. ஆனால், Vivo V27 போனில் மீடியாடெக் டிமன்சிட்டி 7200 5G பிராசசர் உள்ளது
 

விவோ V27 ப்ரோ, விவோ V27 ஸ்மார்ட்போன் என இரண்டிலும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளன. மேக்ரோ லென்ஸ் கேமரா இருப்பது சிறப்பு. மேலும்,  பல்வேறு வீடியோ மற்றும் புகைப்பட மோட்கள் உள்ளன. குறிப்பாக திருமண ஸ்டைல் உருவப்படம், ஆரா லைட், பனோரமா மற்றும் டைம்-லாப்ஸ் புகைப்படம் எடுத்தல் போன்ற வசதிகள் உள்ளன. 

கூடுதலாக, இரண்டு மாடல்களிலும் முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸ் நுட்பத்துடன் கூடிய 50 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. மற்றபடி வழக்கமான அசம்சங்கள் உள்ளன. அதாவது, 5G, Wi-Fi, ப்ளூடூத் v5.3, GPS, Beidu, Glonass, Galileo, Navic சென்சார்கள்மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை உள்ளன.
 

Latest Videos

click me!