ஓப்போ நிறுவனம் சமீபத்தில் Oppo Find N2 Flip என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. அதன்படி, ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் ஸ்மார்ட்போனை மார்ச் 13 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்தப்போவதாக ஒப்போ ட்விட்டரில் அறிவித்தது.
இது குறித்து ஓப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஓ ஸ்னாப், அறிமுகம் கிட்டத்தட்ட வந்துவிட்டது! மார்ச் 13 ஆம் தேதி விலை தெரியவரும்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Oppo Find N2 ஆனது மெருகூட்டப்பட்ட அலுமினிய ஃபிரேம், மேட் கிளாஸ் பின்புறம் கொண்டுள்ளது.
இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். 3.26-இன்ச் செங்குத்து டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, 17:9 செங்குத்து தளவமைப்புடன் ஃபோனின் மேல் பாதியில் 48.5% பங்கு உள்ளது. மொத்தம் இரண்டு வண்ண நிறங்களில் வருகிறது. அவை: மூன்லைட் பர்பிள், ஆஸ்ட்ரல் பிளாக் ஆகும்.