அண்மையில் அறிமுகமான ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் போன்கள் மிட்நைட், ஸ்டார் லைட், சிவப்பு, நீலம் , ஊதா நிற மாடல்களாக வந்துள்ளன. இந்த நிலையில், தற்போது புதிதாக மஞ்சள் நிற வேரியண்டில் வந்துள்ளது. இந்தியாவில் புதிய மஞ்சள் நிற மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
இந்தியாவில் iPhone 14, iPhone 14 Plus (மஞ்சள் நிற மாடல்) விலை விவரங்கள்:
இந்தியாவில் புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மஞ்சள் நிற மாடல்களின் விலைகள் முறையே ரூ.79,900 மற்றும் ரூ.89,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இரண்டும் 256ஜிபி மெமரி, 512ஜிபி மெமரி என்ற அளவில் உள்ளது. வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் மஞ்சள் நிற ஐபோன் விற்பனைக்கு வருகிறது.
வாடிக்கையாளர்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இதை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் போன்களுக்கான சிலிக்கான கவர்கள் நான்கு புதிய வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை: கேனரி மஞ்சள், ஆலிவ், வானம் மற்றும் கருவிழி நிறம் ஆகும்.