செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால், அமெரிக்க டெக் நிறுவனங்கள் பெரும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, உலக டெக் துறையின் வேலைவாய்ப்பு அமைப்பையே மாற்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகின்றன. பொருளாதார நிபுணர்களின் பார்வையில், இது ஒரு தற்காலிக செலவுக் குறைப்பு நடவடிக்கை அல்ல; மாறாக, AI மையமாக உருவாகும் புதிய தொழில்துறை மாற்றத்தின் ஆரம்ப கட்டமாகவே பார்க்கப்படுகிறது. 2020 முதல் இதுவரை அமெரிக்க டெக் துறையில் சுமார் 9 லட்சம் பேர் இழந்துள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
25
மைக்ரோசாஃப்ட் வேலைநீக்கம்
2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 92 ஆயிரம் டெக் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மெட்டா மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களில் இருந்து மட்டும் 20 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு அடுத்ததாக அமேசான், கூகுள், ஆரக்கிள், சேல்ஸ்ஃபோர்ஸ், நைக் மற்றும் ஸ்நாப் போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த காலத்தில் தேவைக்கு அதிகமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் மற்றும் தற்போது AI தொழில்நுட்பம் பல பணிகளை தானியங்கி முறையில் செய்யத் தொடங்கியது ஆகிய இரண்டும் இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
35
மெட்டா பணிநீக்கம்
இன்று ஆட்குறைப்பு தொடரும் என்ற அச்சமும் நிலவுகிறது. மெட்டா நிறுவனம் மேலும் 8 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, 6 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை நிரப்பாமல் வைக்க முடிவு செய்யப்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களில் 7% பேரை விருப்ப ஓய்வுக்கு ஊக்கப்படுத்தி வருகிறது. நைக் நிறுவனம் 1,400 பணியிடங்களை முற்றிலும் ரத்து செய்துள்ளது. இதனால், “AI காலத்தில் மனித வேலைவாய்ப்பின் எதிர்காலம் என்ன?” என்ற கேள்வி உலகளவில் அதிகமாக பேசப்படுகிறது.
ஒருபுறம் பணியாளர்களை குறைக்கும் நிறுவனங்கள், மறுபுறம் AI தொழில்நுட்பத்தில் கோடிக்கணக்கான முதலீடுகள் குவிந்து வருகின்றன. ஆல்ஃபபெட், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டில் மட்டும் AI மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் சுமார் 66 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முன்பு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தேவைப்பட்ட பணிகள், தற்போது குறைந்த பணியாளர்களுடன் AI மூலம் மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நிறுவனங்களின் லாபம் அதிகரித்தாலும், வேலைவாய்ப்பு சந்தையில் அச்சம் அதிகரித்து வருகிறது.
55
டெக் வேலைவாய்ப்பு
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளும் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த 14 அம்சத் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை பாகிஸ்தான் மூலமாக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளைகுடா மற்றும் ஹார்மஸ் ஜலசந்தியில் கடல் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் ஏற்கனவே டெக் துறையின் அதிர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேச அரசியல் பதற்றங்களும் சந்தைகளில் புதிய கவலைகளும் ஏற்படுகின்றன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.