ஸ்பாம் அழைப்புகள் மற்றும் மோசடி மெசேஜ்களுக்கு எதிராக டிராய் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் வரவிருக்கும் MNV பிளாட்ஃபாரம் மூலம் மோசடிகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பாம் அழைப்புகள் மற்றும் மோசடி மெசேஜ்கள் குறித்து பல மாதங்களில் அதிக புகார்கள் வரும் நிலையில், டிராய் (Telecom Regulatory Authority of India) நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2.1 மில்லியன் (21 லட்சம்) மொபைல் நம்பர்களை டிராய் நிரந்தரமாக பிளாக் செய்துள்ளது. அதனுடன், சுமார் 1 லட்சம் மோசடி தொடர்புகளில் ஈடுபட்ட நிறுவனங்கள்/என்டிட்டிகளும் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. டிராய் இதுபற்றி தெரிவித்ததாவது “நம்பரை பிளாக் செய்வது மட்டும் போதாது. பயனர்கள் DND ஆப்பில் ரிப்போர்ட் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
24
புகார் அதிகரிப்பதால் பெரிய நடவடிக்கை
டிராய் தெரிவித்தபடி, DND (Do Not Disturb) ஆப்பில் பயனாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த நம்பர்களை விசாரித்து, தவறாக பயன்படுத்தப்பட்ட நம்பர்களை நிரந்தரமாக துண்டித்துள்ளனர். ஸ்பாம் நம்பர்கள் பிளாக் செய்யப்பட்டாலும், மோசடியாளர்கள் புதிய சிம் எடுத்து தொடர்ந்து பிறருக்கு அழைப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், ரிப்போர்ட் செய்வதே முக்கியமான மற்றும் நீண்டகால தீர்வு என டிராய் வலியுறுத்துகிறது.
34
பயனர்களுக்கு டிராய் வழங்கும் முக்கிய ஆலோசனைகள்
டிராய், மொபைல் பயனர்களை டிராய் DND ஆப்பை பதிவிறக்கம் செய்து ஸ்பாம் கால்கள், மெசேஜ்களை ரிப்போர்ட் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், OTP, UPI PIN போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அழைப்பு வந்தால் உடனே துண்டிக்கவும். எந்த ஆன்லைன் மோசடி ஏற்பட்டாலோ அல்லது முயற்சி நடந்தாலோ 1930 ஹெல்ப்லைன் அல்லது cybercrime.gov.in மூலம் புகார் அளிக்கவும் கூறியுள்ளது.
தொலைத்தொடர்பு துறை விரைவில் Mobile Number Validation (MNV) எனும் புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, ஒரு மொபைல் நம்பரைப் பயன்படுத்தும் நபர் KYC-யில் பதிவு செய்யப்பட்ட நபரே தானா என்பதை சரிபார்க்கிறது. இதன் மூலம் கள்ள சிம்கள், போலி அடையாள நம்பர்கள் போன்றவை குறையும். வரவிருக்கும் மாதங்களில் இந்த பிளாட்ஃபாரம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தும் முக்கிய கருவியாக இருக்கும்.