Amazon இல் ஐபோன் 16 விலை ரூ.66,900 என பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ரூ.13,000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. பழைய iPhone-ஐ மாற்றினால் (எக்ஸ்சேஞ்ச்), அதிகபட்சம் ரூ.47,650 வரை பெறலாம். உதாரணமாக, iPhone 15 (128GB, சேதமில்லாமல்) கொடுத்தால் ரூ.30,250 வரை எக்ஸ்சேஞ்ச் விலை கிடைக்கும். இதனால் ஐபோன் 16-ன் விலை ரூ.36,650 ஆக குறையும். கூடுதலாக வங்கி ஆஃபர்களில் ரூ.4,000 வரை சேமிக்கலாம். Flipkart-ல் ஐபோன் 16 விலை ரூ.69,900, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களால் விலை இன்னும் குறையும். Vijay Sales-ல் அதிகாரப்பூர்வ விலை ரூ.69,900 இருந்தாலும், 5% கூடுதல் தள்ளுபடியில் ரூ.66,490 ஆக குறைக்கப்பட்டுள்ளது.