ராக்கி வந்துட்டான்.. 5200mAh பேட்டரி, 200MP கேமரா.. Galaxy S26 Ultra அம்சங்கள் அசத்துது.!

Published : Nov 25, 2025, 12:14 PM IST

சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்சி S26 அல்ட்ரா, 5,200mAh பேட்டரி மற்றும் 60W வேகமான சார்ஜிங் போன்ற மேம்பாடுகளுடன் வரவுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 2026 ஜனவரியில் அறிமுகமாகலாம்.

PREV
14
சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா

சாம்சங் தனது அடுத்த தலைமுறை Galaxy S26 Series-ஐ தயாரித்து வருகிறது. இதில் மிக பிரீமியம் மாடல் Galaxy S26 Ultra குறித்து புதிய லீக்குகள் வெளியாகி வருகின்றன. சீனாவில் இருந்து வந்த தகவலின்படி, இந்த மாடல் 5,200mAh பேட்டரியுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய Galaxy S25 Ultra மற்றும் அதற்கு முன் வந்த அல்ட்ரா மாடல்களில் 5,000mAh மட்டுமே இருந்ததால், இது சிறிய ஆனால் முக்கியமான மாற்றம் என படுகிறது.

24
கேலக்சி எஸ்26 அல்ட்ரா அம்சங்கள்

Galaxy S26 Ultra-வில் 4,855mAh பேட்டரி மட்டுமே வரும் எனக் கூறப்பட்டது. ஆனால் புதிய தகவல்கள் அதை முழுமையாக மறுத்துள்ளன. அதோடு, இந்த மாடலில் 60W வயர்டு சார்ஜிங் மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கிடைக்கும் என புதிய தகவல். இதனால் சார்ஜிங் வேகம் முன்னோடிகளை விட அதிகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

34
கேமரா மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள்

புதிய ரெண்டர்கள் மற்றும் ரிப்போர்ட்ஸ் படி, S26 Ultra flat-edge display, punch-hole camera cutout, மற்றும் rounded corner design உடன் வரலாம். கேமரா பகுதியில் 200MP முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ், மற்றும் 10MP டெலிஃபோட்டோ சென்சார் 3x ஆப்டிகல் ஜூம் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
செயலி மற்றும் வெளியீட்டு விவரம்

Galaxy S26 Ultra-வில் சில நாடுகளில் Snapdragon 8 Elite Gen 5 SoC, மற்ற சில மார்க்கெட்களில் Exynos 2600 chipset கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.9-இன்ச் பெரிய AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சாம்சங் 2026 ஜனவரியில் இந்த S26 Series-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories