கூகுள் மீட்-ல் பிரச்சனை ஏற்பட்டதன் பின்னணி குறித்து ஆய்வு செய்யும் போது, desktop version meeting join page-ல் மட்டுமே பயனர்கள் “தடுக்கப்பட்ட” அல்லது “மீண்டும் முயற்சி” செய்தி காணப்படுவதாக தெரியவந்துள்ளது. Downdetector தகவல்படி 64% பயனர்களின் இணையதள பிரச்சனை, 34% சர்வர் பிரச்சனையை புகாரளித்துள்ளனர். கடந்த வாரம் Cloudflare சேவையில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக AWS, Oracle, Google உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சேவை தடங்கலை சந்தித்துள்ளன. காரணம் உலகம் முழுவதும் பயன்படும் பெரும் cloud infrastructure ஆகும். சிறிய கட்டமைப்பு பிழை, மென்பொருள் புதுப்பிப்பு பிரச்சனை, அல்லது போக்குவரத்து அதிகரிப்பு போன்ற ஒன்றே உலகளாவிய சர்வர்களைக் குறைக்க முடியும். பொறியாளர்கள் இந்த கோளாறுகளை சரிசெய்ய non-stop firefighting செய்து வருகின்றனர்.