ஆசை ஆசையாய் காதல் திருமணம்! அதிகாலையில் கார்த்திகா செய்த வேலை! பார்க்க கூடாததை பார்த்த கணவர்!

Published : Sep 23, 2025, 11:28 AM IST

திண்டுக்கல்லில், மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட கார்த்திகா என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் வசித்து வந்த நிலையில், இவரது மரணம் குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
14
காதல் திருமணம்

தற்போதைய காலக்கட்டத்தில் காதல் திருமணம் என்பது ஒரு பேஷனாகிவிட்டது. காதலிக்கும் போது ஆசை ஆசையாய் காதலிக்கும் ஜோடிகள், திருமணத்திற்கு அப்படியே மொத்தமாக மாறிவிடுகிறார்கள். சின்ன சின்ன பிரச்சனை என்றாலும் அதை எதிர்கொள்ள முடியால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 3 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

24
காதல் திருமணம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சங்கர் (26). திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே பெரியகோட்டையில் உள்ள செங்கல் சூளையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் மன்னார்குடியை சேர்ந்த உறவினரான கார்த்திகா (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

34
தூக்கிட்டு தற்கொலை

இதையடுத்து சங்கர் கார்த்திகா தம்பதியினர், சங்கர் வேலை பார்க்கும் செங்கல் சூளை அருகில் உள்ள பெரியகரட்டுப்பட்டி என்ற ஊரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். அதே பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் கார்த்திகா கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கியிருக்கிறார்கள். நேற்று அதிகாலையில் சங்கர் எழுந்து பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கார்த்திகா வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கியுள்ளார்.

44
ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு கணவர் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார்த்திகாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories