விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு 18 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் விற்பனை கடையில் பார்ட் டைமாக பணி புரிந்து வந்தார். அந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
24
செல்போன் மூலம் வீடியோ கால்
இந்நிலையில் கல்லூரி மாணவி செல்போன் கடையில் நேற்று காலை பணியில் இருந்தார். அப்போது தர்ஷினி தனது காதலனுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீடியோ காலில் பேசிக்கொண்டே கடையின் பின்புறமாக சென்ற தர்ஷினி, அங்கு உள்ள ஒரு அறையில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
34
தூக்கிட்டு தற்கொலை
இதனை வீடியோ காலில் பார்த்துக் கொண்டே இருந்த அந்த காதலன் இணைப்பை துண்டித்துவிட்டு, உடனடியாக கடையில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைகேட்டு பதறிய ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது தர்ஷினி துப்பட்டாவால் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதலித்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். அந்த விவகாரம் தெரிந்ததால்தான் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது, வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.