வரிச்சூர் செல்வம் என்பவர் மதுரை மாவட்டத்தில் சேர்ந்த பிரபல ரவுடி. அவர் கிராமம் வரிச்சியூர் என்பதால் இந்தப் பெயர் பெற்றவர். கிலோக்கள் அளவில் நகைகள் அணிந்திருப்பார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வரிச்சூர் செல்வத்தை சுட்டு பிடிக்க கோவை காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால் கோவை சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போது கோவை காவல்துறையில் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற செய்தி வெளியாகி எனக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நான் திருந்தி வாழ்ந்து வருகிறேன். என் குடும்பம் பேரன் பேத்திகள் என தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது என தெரிவித்திருந்தார்.