மாதம்பட்டி ரங்கராஜ் தம்மை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என் குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பிலபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு விசாரணைக்காக ஆஜரான கிறிஸில்டாவிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியே வந்த ஆடை வடிவமைப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
24
மாதம்பட்டியிடம் யாரும் கேள்வி எழுப்புவது கிடையாது..
அப்போது அவர் கூறுகையில், “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறான கருத்துகளை பரப்புகின்றனர். மாறாக ரங்கராஜிடம் எந்தவித கேள்வியும் எழுப்பப்படுவது கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக என்ன நடந்தது என காவல் துறையினரிடம் விளக்கம் அளித்துள்ளேன்.
34
ஆதாரங்கள் காவல் துறையினரிடம் ஒப்படைப்பு
மாதம்பட்டியும், நானும் இணைந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களை காவல் துறையினரிடம் வழங்கி உள்ளேன். என்னென்ன ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை என்னால் கூற முடியாது. விசாரணை நடுநிலையோடு நடைபெறும் என நம்புகிறேன். சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பலரும் பரப்பி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வியூஸ் வருகிறது என்பதற்காக எதுவும் தெரியாமல் ஏதேதோ பேசக் கூடாது.
மேலும் நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். என்னைப் பற்றி அவதூறாக பேசினால் இந்த குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது. உங்கள் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள், அவர்களுக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் எப்படி நடந்துகொள்வீர்கள் என்று சிந்தித்துப் பார்த்து பேசுங்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.