பாஜக நிர்வாகி ராதிகா சரத்குமாரின் தாயார் மறைவிற்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அண்ணாமலை சென்று அஞ்சலி செலுத்து ராதிகாவிற்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிட்ம பேசிய அண்ணாமலை,டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாகவும், கூட்டணியில் இடம்பெற அழைப்பு விடுத்தாகவும் தெரிவித்தார்.
அப்போது அவரது கருத்தை தினகரன் கூறியதாகவும் கூறினார். ரஜினியோடு சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஜினி சாரை அடிக்கடி சந்திப்பேன். மாதத்திற்கு ஒருமுறை, இரண்டு முறை சந்திப்பேன். அதை நான் சமூக வலை தளத்தில் சூப்பர் ஸ்டாரை பார்த்தேன் என பதியவில்லை.