Published : Aug 21, 2025, 08:02 AM ISTUpdated : Aug 21, 2025, 08:11 AM IST
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை நடைபெறும் நிலையில் அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்களின் எண்ணிக்கை லட்சத்தைக் கடந்துள்ளதால் தமிழக பிரதான கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது. மாநாடு மாலை நேரத்தில் தான் தொடங்கும் என்றாலும் நள்ளிரவு முதலே மாநாட்டு திடலை நோக்கி சாரை சாரையாக தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். மாநாட்டில் மொத்தமாக 1.5 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த இருக்கை எண்ணிக்கையே 1.5 லட்சம் தான் என்றாலும் தற்போதே அங்கு குவிந்துள்ள தொண்டர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என்று சொல்லப்படுகிறது.
24
TVKவில் இளைஞர் பட்டாளம்
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு திடலுக்கு வரும் வாகனங்கள் சுமார் 3 கிமீ முன்பாகவே நிறுத்தப்பட்டு அங்கிருந்து தொண்டர்கள் நடந்து செல்கின்றனர். மாநாட்டு திடலில் கூடியவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்களாக உள்ளனர். தமிழகத்தில் பிரதான கட்சிகளாக திமுக.வும், அதிமுக.வும் உள்ள நிலையில் இக்கட்சிகளில் இருக்கக்கூடிய தொண்டர்களில் பெரும்பாலானோர் சுமார் 40 வயதுக்கு அதிகமானோர் தான். அடுத்த தலைமுறை என்று அழைக்கக்கூடிய 18 வயது முதல் 35 வயது வரையிலான வாக்காளர்களை தங்கள் கட்சிகளில் இணைக்க இரு பிரதான கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
34
கலக்கத்தில் பிரதான கட்சிகள்
ஆனால் அண்மையில் கட்சி தொடங்கிய விஜய் புதிய தலைமுறை வாக்களர்கள் அனைவரையும் தனது கட்சி பக்கம் வாரி சுருட்டியுள்ளார் என்று சொன்னால் மிகை ஆகாது. அந்த அளவிற்கு கட்சியில் இளைஞர் பட்டாளம் கொத்து கொத்தாக சேர்ந்து வருகிறது. இதனால் அதிமுக, திமுக.வுக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதப்படுகிறதோ என அக்கட்சி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கு சான்றாக விஜய் மாநாட்டில் நாற்காலிகள் அமைக்க 5 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் சில அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் 4 ஒப்பந்ததாரர்கள் நாற்காலி வழங்காமல் பின்வாங்கினர். இதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு மாநாடு நடைபெற உள்ளது.