மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருவதால் மாநாட்டு திடல் விழா கோலம் பூண்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நீங்கள் வேண்டுமானால் 3 மணிக்கு மாநாட்டைத் தொடங்கிக் கொள்ளுங்கள், ஆனால் எங்களுக்கு கொண்டாட்டம் சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கி விட்டது என்று சொல்வது போல் தளபதி விஜய்யின் ரசிகர்கள் நள்ளிரவு முதலே மாநாட்டு திடலில் குவியத் தொடங்கி உள்ளனர்.
24
ஸ்நாக்ஸ் கிட்
மாநாடு தொடங்கும் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக ஸ்னேக்ஸ் பேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கிட்டில் பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை அடங்கிய பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 2 பார்க்கிங் வசதிகளுடன் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
34
சாரை சாரையாக வரும் தொண்டர் படை
மாநாடு தொடங்க இன்னும் பல மணிநேரம் உள்ள நிலையில் தொண்டர்கள் தாங்கள் வந்த வாகனங்களை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று மேடைக்கு அருகே செல்லும் காட்சிகளை நாம் பார்க்க முடிகிறது.
மாநாட்டில் தொண்டர்கள் அமர்வதற்காக சுமார் 1.5 லட்சம் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் 8 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு இன்று மாலை தான் தொடங்கும் என்ற நிலையில் நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் தற்போதே மாநாட்டு திடல் விழாக்கோலம் பூண்டுள்ளது.