இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் பணிகளை முடுக்கி விடும் வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மாநாடு நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் தவெக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இறுதியில் தவெக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.
பிரம்மாண்ட ஏற்பாடுகள்
தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான பெரிய மேடை, பார்வையாளர் கேலரிகள், வாகன பார்க்கிங், தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள், உணவுப்பொருட்களை விற்கும் தற்காலிக கடைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.