எங்களுக்கு தேவை ஆறுதல் மட்டுமே, பணம் இல்லை என்று கூறி கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தவெக வழங்கிய ரூ.20 லட்சத்தை மீண்டும் விஜய்க்கே அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக வெற்றி கழகம் அறிவித்தது.
24
கரூரில் மண்டபம் கிடைப்பதில் சிக்கல்
மேலும் பாதிக்கப்பட்டவர்களை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசிய விஜய், உரிய அனுமதி கிடைத்ததும் உங்களை நேரில் சந்தித்து நிவாரணத் தொகையை வழங்குவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் மண்டபம் ஒன்றை ஏற்பாடு செய்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரணத் தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் கட்சியினரின் அழுத்தம் காரணமாக மண்டபம் கிடைக்கவில்லை என தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
34
காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய்..
இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு முன்பாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. மேலும் கரூரில் மண்டபம் கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பேருந்து மூலம் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். மாமல்லபுரத்தில் விடுதி ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள் வழங்கிய கோரிக்கைக் கடித்தையும் பெற்றுக் கொண்ட விஜய் வாழ்நாள் முழுவதும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாகவும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் கோடங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரது குடும்பத்தினரையும் விஜய் வீடியோ காலில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அதன் தொடர்ச்சியாக ரூ.20 லட்சம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் மாமல்லபுரத்திற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்த ரமேஷ்ன் மனைவி சங்கவி, “நாங்கள் மாமல்லபுரம் வரவேண்டிய அவசியம் இல்லை. எங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக சொன்னதால் தான் நாங்கள் நிவாரணத் தொகையைப் பெற சம்மதம் தெரிவித்தோம். ஆனால் எங்களிடம் எந்தவித தகவலும் சொல்லாமல் ரூ.20 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தினர்.
மேலும் எங்களை மாமல்லபுரம் வரச்சொல்லி அழைத்தனர். விஜய் தான் இங்கு வரவேண்டும். எங்களுக்கு தேவை ஆறுதல் மட்டும் தான் என்று கூறி விஜய் அனுப்பிய ரூ.20 லட்சத்தை அவருக்கே திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.