தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பணியில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகள் போட்டி போடுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அரை நூற்றாண்டு காலமாக திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது.
தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களான கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. அந்த வகையில் திமுக தலைவராக ஸ்டாலினும், அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமியும் களத்தில் உள்ளனர்.