சென்னையில், தினமும் குடித்துவிட்டு வந்து மகளைத் துன்புறுத்திய மருமகனை, மாமியார் கூலிப்படையை ஏவி தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மருமகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் கூலிப்படையைச் சேர்ந்தவரையும், மாமியாரையும் கைது செய்தனர்.
தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக்காமல் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். மதுமட்டுமல்லாமல் கைப் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைக்கு ஏறிய போதையால் குழந்தை மற்றும் மனைவியை கொலை செய்யும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் தினமும் குடித்து விட்டு மகளுக்கு ஒயாமல் டார்ச்சர் செய்த மருமகனை மாமியார் கூலிப்படை ஏவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24
குடிபோதைக்கு அடிமையான மருமகன்
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பாபு(30). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடியான பாபு தினமும் குடித்து விட்டு வந்து காதல் மனைவியிடம் சண்டை போடுவதை பொழப்பாக வைத்துள்ளார்.
34
கூலிப்படையை ஏவிய மாமியார்
நாளுக்கு நாள் கணவர் தொல்லை தாங்க முடியாததால் வேறு வழியில்லாமல் பாரதி தனது தாயார் ரசீதாவிடம் வேதனையை கொட்டித்தீர்த்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்ததது மட்டுமல்லாமல் ஆத்திரம் அடைந்துள்ளார். தனது மருமகனுக்கு சரியான பாடத்தை கட்டுக்கொடுக்க வேண்டும் என்பதால் மாமியார் சரித்திர பதிவேடு குற்றவாளியான சஞ்சய் சாய் என்பவரை ஏவி மருமகன் பாபுவை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாபு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படையைச் சேர்ந்த சஞ்சய் சாய் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து மாமியார் ரசீதாவும் கைது செய்யப்பட்டார். மருமகனை மாமியாரே கூலிப்படையை ஏவி தாக்கிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.