பெத்ததவங்க பேச்சை கேக்காமா காதல் கல்யாணம் பண்ணா இப்படி தான்! 10 மாத குழந்தையுடன் கதறும் சூரிய பிரியா!

Published : Oct 04, 2025, 09:57 AM IST

காதல் திருமணம் செய்த கணவர், 50 பவுன் நகை மற்றும் சாதிப் பிரச்சினையால் பிரிந்து சென்றதால், மனமுடைந்த மனைவி தனது கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
காதல் திருமணம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (23) இவரும் ஆலங்காயம் வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் சூரிய பிரியா(20) ஆகிய இருவரும் வாணியம்பாடி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரியில் பயின்று வந்தனர். அப்போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

24
பத்து மாதத்தில் ஆண் குழந்தை

இந்நிலையில் தற்போது பத்து மாதத்தில் ஆண் குழந்தை இருந்து வரும் நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு அம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி காளியப்பன் தனது அம்மா வீட்டிற்கு வந்த நிலையில் 50 பவுன் நகை கொண்டு வந்தால்தான் நம் இருவரும் சேர்ந்து வாழ முடியும். மேலும் மாற்று சமூகத்தினர் என்ற காரணத்தால் எனது அம்மா உன்னுடன் வாழக்கூடாது என்று கூறுகிறார்.

34
கொலை மிரட்டல்

தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதாக காளியப்பன் தனது காதல் மனைவியான சூரிய பிரியாவிடம் கூறியதன் காரணமாக அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சூரிய பிரியா கடந்த செப்டம்பர் 4ம் தேதி காதலன் வீட்டின் முன்பு காதல் கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 15 நாட்கள் கழித்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து சூரியபிரியா காளியப்பனின் மாட்டு கொட்டையில் கை குழந்தையுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காளிமுத்துவின் உறவினர் ரவி என்பவர் சூரிய பிரியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

44
தீக்குளிக்க முயற்சி

மேலும் சூரிய பிரியா நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் காளிமுத்து சேர்ந்து வாழ மறுக்கிறார் எனவும் கூறப்படுகிறது. சூரிய பிரியா கணவனோடு சேர்த்து வைக்கக் கோரி நாட்றம்பள்ளி காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். பின்னர் காவலர்கள் சூரிய பிரியாவை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் காரணமாக கலைந்து சென்றார். காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Read more Photos on
click me!

Recommended Stories