விஜய் - இபிஎஸ் கூட்டணி.? தவெகவிற்கு இத்தனை தொகுதியா.! விட்டுக் கொடுக்குமா அதிமுக.?

First Published | Nov 17, 2024, 1:11 PM IST

தமிழக வெற்றிக்கழகம் புதிய அரசியல் கட்சியாக களமிறங்கியுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலில் விஜய்

தமிழக  அரசியல் களத்தில் புதிய கட்சியாக களம் இறங்கியுள்ளது தமிழக வெற்றிக்கழகம், இந்த கட்சியால் எந்த கட்சிக்கு ஆபத்து, ஆபத்தில்லை என பலரும் பல வித கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம்.

தமிழ் திரைப்படத்துறையில் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய், இதனையெல்லாம் உதறிவிட்டு தான் அரசியலில் குதித்துள்ளார். தனது முதல் மாநாட்டை யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். பல லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

TVK Vijay

விஜய் நிலைப்பாடு என்ன.?

இதனால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை விஜய் ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தற்போதே கூறி வருகின்றனர். எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக கூறியுள்ள விஜய் தனித்து போட்டியிடுவாரா? அல்லது கூட்டணி வைப்பாரா என எதிர்பார்ப்பு கிளம்பியது.

அதற்கு மாநாட்டில் பதில் கொடுத்த விஜய் தங்கள் நம்பி வரும் கட்சியோடு கூட்டணி அமைப்போம் என தெரிவித்தார். எனவே 2026ஆம் தேர்தலில் கூட்டணி அமைத்து விஜய் போட்டியிடப்போவது உறுதியாகிவிட்டது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை விஜய் தனியாக எதிர்க்க முடியாத நிலை உள்ளது. தனித்து போட்டியிட்டால் எதிர்ப்பு வாக்குகள் சிதறும்.எனவே திமுகவிற்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Tap to resize

அதிமுகவுடன் கூட்டணி அமையுமா.?

எனவே தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற முடியும். இரண்டு கட்சிகளும் தனித்து தேர்தலை எதிர்கொண்டால் தோல்விதான் இரண்டு கட்சிகளுக்கும் கிடைக்கும்.

இந்தநிலையில் தான் இரண்டு தரப்பும் திறைமறைவில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனித்து போட்டி என கூறிவிட்டு தேர்தலில் வாக்குகளை பிரித்து தோல்வி அடைய விஜய் விரும்பவில்லை என கூறப்படுகிறது. எனவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

TVK Vijay

80 தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா அதிமுக.?

அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 80 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அப்படி 80 தொகுதிகளை அதிமுக விட்டுக்கொடுத்தால் மீதமுள்ள 154 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடும் நிலை உருவாகும். மேலும் சிறிய, சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீதமுள்ள தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.

இதனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களை பெற முடியமா.? என்ற குழப்பம் அதிமுக மத்தியில் எழுந்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி எந்த முடிவை எடுக்கப்போகிறார் என்பதை வரும் நாட்களில் தெரியவரும் என கூறப்படுகிறது. 

Latest Videos

click me!