மாணவர்களுக்கு 1,00,000 ரூபாயை கல்வி உதவித்தொகையாக அள்ளித்தரும் தமிழக அரசு.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : Nov 17, 2024, 10:47 AM ISTUpdated : Nov 17, 2024, 10:54 AM IST

தமிழக அரசு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பி.எச்டி. படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள அழைப்பு

PREV
15
மாணவர்களுக்கு 1,00,000 ரூபாயை கல்வி உதவித்தொகையாக அள்ளித்தரும் தமிழக அரசு.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு
college student

தமிழக அரசின் கல்வி திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்க வேண்டும் என நோக்கத்தில் பல திட்டங்களை பார்த்து, பார்த்து தமிழக அரசு செயல்படுத்துகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகவும் கல்வி உதவி தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி கல்வி உதவி தொகையாக  5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2,000 ரூபாயும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 6,000 ரூபாயும்,

25
College Student

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 8,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும் பட்டப்படிப்புக்கு மாணவர்களுக்கு  12,000 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதே போல முதுகலை பட்டத்திற்கு 14,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தநிலையில் ஆராய்சி படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் உதவி தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதன் படி, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில்  ஆராய்ச்சி படிப்பு பி.எச்டி. மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும்  ரூ.1,00,000 வீதம் 50 மாணவா்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

35
college student

ஆராய்சி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்

இந்த திட்டத்திற்காக 50,00,000 ரூபாய்  நிதி ஒதுகீட்டில் முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறவுள்ள மாணவர்கள் விண்ணபிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி படிப்பு(Ph.D) மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்குவது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் படி, முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ( Chief Minister's Research Fellowship) முழுநேரம் மற்றும் பகுதி நேரம் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

45
college student

விண்ணப்பிக்க அழைப்பு

உரிய கல்விச்சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வட சென்னை, மாவட்ட ஆட்சியரக வளாகம், சென்னை என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரேஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்கள்.

தகுதிகள்

முழுநேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு(Ph.D.,) பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மட்டும்

வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. 

இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.
 

55
differently abled

ஆவணங்கள்

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல்

ஆராயச்சிப் படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை 

வாய்மொழி தேர்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் 

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டதற்கான இருப்பிடச் சான்று 

பணம் பெறும் முறை

ஆராய்ச்சிப் படிப்புக்கான, ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி  வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் 1 லட்சம் ரூபாய்க்கான  ஊக்கத்தொகையானது மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
 

Read more Photos on
click me!

Recommended Stories