சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்.! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை

First Published | Nov 17, 2024, 8:23 AM IST

கல்வியானது மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானது. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு,  அதே நேரத்தில் மாணவர்களின் கலை திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி சாதித்த மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர். 

STUDENT

கல்விக்கு முக்கியத்துவம்

மாணவ, மாணவிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி முக்கியமானதாகும். அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இலவச பாட புத்தகம், காலணி, புத்தகப்பை, பஸ் பாஸ், சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கல்வி உதவி தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்தவகையில் கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம்  கொடுக்கப்படுகிறதோ அதே அளவிற்கு கலை நிகழ்விற்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. 
 

school student

பள்ளிகளில் கலைத்திருவிழா

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. மேலும் கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழாவின் நோக்கமாகும். அதன் படி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம். மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியானது நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதமாக பல்வேறு இடங்களில் போட்டி நடத்தப்பட்டது.

Tap to resize

STUDENT TOUR

மாணவ, மாணவிகளுக்கு கலைப்போட்டி

மாணவ,மாணவிகளுக்கு பரதநாட்டியம், சிலம்பம் சுற்றுதல், நாட்டுப் புறப்பாடல், களிமண் பொம்மைகள் செய்தல், மணல் சிற்பம், பலகுரல் பேச்சு, மாறு வேட போட்டி, நகைச்சுவை, கதை சொல்லுதல், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, மாறு வேட போட்டி, நடனம்  போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளி, வட்டாரம். மாவட்டம் அளவிலான போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மாநில அளவிலான போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் மாநில அளவிலான கலைத்திருவிழாவிற்கான போடிகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

student

மாநில அளவிலான போட்டி

1 மற்றும்  5 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதியும், 9ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11வது மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதி நடைபெறும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

School Student

வெளிநாட்டிற்கு சுற்றுலா

மேலும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசையில் முதல் 25 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!