ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தெரிவிக்காமல் அரசின் சார்பில் வெற்று அறிக்கைகள் வெளியாகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் போது, இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, முதல்வர் இந்த காரணங்களை சீர்தூக்கி பார்த்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், சரண் விடுப்பு , காலிப்பணியிடங்கள் நிரப்புதல் மீதான கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.