எந்தெந்த மாவட்டங்களில் இன்று சம்பவம் செய்யப்போகும் மழை! சென்னையின் நிலை என்ன? வார்னிங் கொடுத்த வானிலை!

Published : Nov 16, 2024, 04:15 PM ISTUpdated : Nov 16, 2024, 05:15 PM IST

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

PREV
15
எந்தெந்த மாவட்டங்களில் இன்று சம்பவம் செய்யப்போகும் மழை! சென்னையின் நிலை என்ன? வார்னிங் கொடுத்த வானிலை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் டிசம்பர் மற்றும் பனிபொழிவு இருக்கும் நிலையில் நவம்பர் மாதத்திலேயே அதிகளவு பனிபொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய போகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25

அதன்படி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 

35

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: School Education Department: அதெல்லாம் உண்மையில்லை! நம்பாதீங்க! அலறும் பள்ளிக்கல்வித்துறை! நடந்தது என்ன?

45

மேலும் 18ம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19 முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

55

சென்னை மற்றும் புறநகர் பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories