TNPSC: தேர்வர்களுக்கு குட்நியூஸ்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

First Published | Nov 16, 2024, 12:57 PM IST

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வர்களுக்கு உடனடி செய்திகளை வழங்க டெலிகிராம் சேனலைத் தொடங்கியுள்ளது. தேர்வு அறிவிப்புகள், முடிவுகள் மற்றும் பிற முக்கிய தகவல்களைப் பெற https://t.me/TNPSC_Office என்ற இணைப்பில் சேரலாம்.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல நிலைகளில் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.  குறைந்த காலி பணியிடங்கள் என்றாலும் எப்படியாவது அரசு பணியில் வாங்கி விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதுகின்றனர். 

இந்த தேர்வு தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தேர்வு முடிவுகள் https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டிஎன்பிஎஸ்சி எக்ஸ் பக்கத்தில் தனக்கென அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியது. அதில் குரூப் 2 தேர்வு, குரூப் 4 தேர்வு அறிவிப்பு, தேர்வு முடிவுகள் அறிவிப்பு, காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு விவரங்கள்  உடனுக்குடன் வெளியிடப்பட்டு வந்தன.

Tap to resize

இந்நிலையில், எக்ஸ் தளத்தை தொடர்ந்து போட்டித் தேர்வர்கள் தொடர்பான செய்தியை அறிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி டெலிகிராம்‌ சேனலை‌ தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் தள பக்கத்தில்: தேர்வர்கள்‌ தேர்வுகள்‌ தொடர்பான செய்திகள்‌ மற்றும்‌ தகவல்களை உடனுக்குடன்‌ தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ டெலிகிராம்‌ சேனல்‌ ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெலிகிராம் சேனலில் சேர்வது எப்படி?

தேர்வர்கள்  https://t.me/TNPSC_Office என்ற இணைப்பை க்ளிக் செய்து, சேனலில் இணையலாம். இதன் மூலம் தேர்வுகள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Latest Videos

click me!