மாணவர்களுக்கு குஷியான நியூஸ் .! 2 லட்சம் ரூபாய் கல்வி உதவி தொகை.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு

First Published | Nov 15, 2024, 2:21 PM IST

தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. அந்த வகையில் ஜனவரி 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

college student

தமிழக அரசு சார்பாக கல்விக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறது. மேலும் உணவு அருந்தாமல் மாணவர்கள் கல்வியை கற்க கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் போன்ற திட்டங்களோடு ஸ்காலர்ஷிப் வழங்கி வருகிறது. அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகையானது வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகிறது.

college student

இந்த நிலையில் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சூப்பர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 2 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயன் பெற மாணவர்கள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT. IIM. IIIT. NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  

Tap to resize

college student

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ற்றும் சீர்மரபினர் இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Applications) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த  

college student

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை (BC, MBC, DNC) சார்ந்த மாணவ மற்றும் மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

college student


மேற்படி கல்வி உதவித்தொகைக்கு. 2024-25ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள். கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5 / மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5 / மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தையோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

college student

மேலும் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான புதியது (FRESH) மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள். தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து  முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2024 க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2025க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர்,

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்/

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம்.

எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5.

தொலைபேசி எண்.044-29515942

மின்னஞ்சல் முகவரி - tngovtiitscholarship@gmail.com
 

Latest Videos

click me!